VJ Parvathy: அப்பா போனதும் செம கஷ்டம்.. நான் VJ-ஆனது இப்படிதான் – வி.ஜே.பார்வதி பகிர்ந்த சம்பவம்!
VJ Parvathys Early Life: தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் வி.ஜே.பார்வதி. இவர் தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் இவர் தனது ஆரம்பகால வாழ்க்கை குறித்து தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

வி.ஜே.பார்வதி
வி.ஜே.பார்வதி (VJ. Parvathy) ஆரம்பத்தில் சின்னத்திரை மற்றும் யூடியூப் சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றிவந்தவர். இவர் ஆரம்பத்தில் தொகுப்பாளராக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர். அதை தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக பங்கேற்றுவந்தார். மேலும் இவருக்கு ஒட்டுமொத்த தமிழில் மக்கள் மத்தியிலும் பிரபலத்தை கொடுத்த நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 9 (Bigg Boss Season 9). இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளராக நுழைந்து பிரபலமானார். இந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி புரோமோவில் இவர் வராமல் இருந்ததே இல்லை என கூறலாம். அந்த அளவிற்கு பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இவர் மிகவும் பிரபலமாக இருந்தார். பின் டாஸ்கின்போது சில பிரச்னை செய்ததன் காரணமாக ரெட்கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
இருந்தாலும் இவருக்கு ஆதரவாகவும் பலரும் குரல் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஆர்.ஜே, வி.ஜே மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் என பிரபலமான இவர், வெப் தொடர்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசிய இவர், தான் எவ்வாறு ஆர்.ஜே மற்றும் வி.ஜே ஆனார் என்ற கதையை பற்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எளிமையான கிராம வாழ்க்கையை விரும்பும் பிரபு தேவா – அவரே வெளியிட்ட வீடியோவை பாருங்க!
வி.ஜே. ஆனா கதையை சொன்ன பார்வதி:
சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசிய பார்வதி, எ”னக்கு சிறுவயதிலிருந்தே ஜர்னலிசம் மீது ஆர்வம் அதிகம். எங்க வீட்டில் அனைவருமே வக்கீல். ஆனால் நான் மட்டும் மீடியா துறையை தேர்ந்தெடுத்தேன். ஆரம்பத்தில் சென்னை தனியார் கல்லூரியில் மீடியாதுறையில் பயிலும்போதுதான் எனது தந்தையை இழந்தேன். பிறகு கல்லூரி விடுதியில் தங்கியிருந்தே எனது யுஜி படிப்பை முடித்தேன். பின்னர் வெட்டு சூழ்நிலையின் காரணமாக, மதுரை காமராஜர் யுனிவர்சிட்டியில் பி.ஜி. படிப்பை தொடர்ந்தேன்.
இதையும் படிங்க: சினிமாவிலிருந்து விலகிவிட்டேனா? தொழிலதிபரை திருமணம் செய்து நான்கு குழந்தை- விமர்சனங்களுக்கு திரிஷா போட்ட பதிவு!
அந்த படிப்பை முடித்தவுடன்தான், எனக்கு மதுரையிலே ஆர்.ஜே வாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் எனது வீட்டிற்கு அருகே என்ற நிலையில், முதலில் அதை செய்துவந்தேன். பிறகு சென்னை போகும் ஐடியா இருந்த நிலையில், 2020ம் ஆண்டில் சென்னை சென்று வி.ஜே -வாக பணியாற்ற ஆரம்பித்தேன். அதன் பிறகு சின்னத்திரை நிகழ்ச்சி மற்றும் பிக்பாஸ் என தொடர்ந்து வளர்ந்தேன்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
வி.ஜே.பார்வதி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
இவர் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்த காட்டான் என்ற வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரை இவர் நடித்திருந்த கதாபாத்திரமானது மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது பார்வதி நடிப்பின் மீது ஆர்வம் காட்டிவரும் நிலையில், சினிமாவில் படங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதுவும் தெரிவித்துள்ளார்.