பிக்பாஸ் ஸ்கூல் டாஸ்கில் தன்னை குறித்து தவறாக வந்த மொட்டை கடுதாசி… கடுப்பான பார்வதி – எழுதியது யார்?

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் ஸ்கூல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் மாணவர்களாக நடிக்க சொன்னால் பலர் தங்களது சொந்த வன்மத்தை கொட்டுவது அப்பட்டமாக மக்களுக்கு தெரிகிறது.

பிக்பாஸ் ஸ்கூல் டாஸ்கில் தன்னை குறித்து தவறாக வந்த மொட்டை கடுதாசி... கடுப்பான பார்வதி - எழுதியது யார்?

பிக்பாஸ்

Published: 

27 Nov 2025 11:14 AM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற டாக் லைனுக்கு ஏற்ப ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர்களின் பட்டியல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் அராஜகம் செய்யும் நபர்களும் எந்தவித நிகழ்ச்சியிலும் பெரிய அளவில் ஈடுபடாமல் இருக்குற இடம் தெரியாம இருக்கனும்னு நினைச்சு இருப்பவங்களும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இந்த சீசனில் பிரவீன் ராஜின் எவிக்‌ஷனை ஏற்க முடியவில்லை என்று மக்கள் பலரும் தங்களது கருத்துகளை நேரடியாக தெரிவித்தனர். அவரின் எவிக்‌ஷனுக்கு பிறகு உள்ளே ஒன்னும் செய்யாமல் சும்மா இருக்கும் போட்டியாளர்களையும் மக்கள் விமர்சித்தனர்.

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 4 வாரங்களுக்கு மேலாக சண்டை மட்டுமே இருந்தது. கூச்சலும் குழப்புமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கவே முடியவில்லை என்று மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு டாஸ்கும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிகழ்ச்சி குழு தொடர்ந்து டாஸ்குகளை வழங்கி வருகின்றது. ஆனால் ஜாலி டாஸ்கையும் இந்த சீசனில் உள்ள போட்டியாளர்கள் தொடர்ந்து சண்டையில் கொண்டுதான் முடிக்கிறார்கள்.

பார்வதி குறித்து தவறாக வந்த மொட்டை கடுதாசி:

இந்த நிலையில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதில் பிக்பாஸ் போட்டியாளர் பார்வதி வார்டனாக இருக்கிறார். அவரைக் குறித்து மிகவும் மோசமான முறையில் யாரோ ஒருவர் மொட்டைக் கடுதாசி எழுதியுள்ளார். அதனைப் படித்த பார்வதி மிகவும் கடுப்பாக வீட்டில் உள்ள அனைவரிடம் பேசி வருகிறார். இது தொடர்பான வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பிக்பாஸில் வியானாவால் கடுப்பான அமித்… அழுகும் வியானா – வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 2026-ம் ஆண்டில் வரிசைக்கட்டும் சூர்யாவின் படங்கள் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

அனு தாக்குதல்களை தாங்கக் கூடிய செயற்கை மிதக்கும் தீவை உருவாக்கும் சீனா
தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ராமர் கோயிலில் ஏற்றப்பட்ட கொடி.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?
ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் மேகி சமைத்த பெண்!