காமெடி ட்ராமா பிடிக்குமா? அப்போ இந்தியில் இந்த பதாய் ஹோ படத்தை மிஸ் செய்யாதீர்கள்
Badhaai Ho Movie : காமெடி ட்ராமா படம் பிடிக்குமா உங்களுக்கு. அப்போ ஓடிடியில் உள்ள இந்த பதாய் கோ படத்தை மிஸ் செய்யாமல் பாருங்கள். வித்யாசமான கதைக்களத்தில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பதாய் ஹோ
இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆயுஷ்மான் குரானா. கடந்த 2012-ம் ஆண்டு முதல் இந்தி சினிமாவில் நாயகனாக வலம் வரும் இவர் தொடர்ந்து வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறார். அதன்படி இவரது கதை தேர்விற்காகவே இவருக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பதாய் ஹோ. இந்தப் படத்தை இயக்குநர் அமித் ரவீந்திரநாத் சர்மா இயக்கி இருந்த நிலையில் படத்திற்கு திரைக்கதையை அக்ஷத் கில்டியல் எழுதி இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குரானா உடன் இணைந்து நடிகர்கள் நீனா குப்தா, கஜராஜ் ராவ், சுரேகா சிக்ரி, சான்யா மல்ஹோத்ரா, ஷீபா சத்தா, ஷர்துல் ராணா, அல்கா கவுசல், அல்கா அமீன், மனோஜ் பக்ஷி, அருண் கல்ரா என பலர் நடித்து இருந்தனர். காமெடி ட்ராமாவாக உருவாகி இருந்த இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜங்லீ பிக்சர்ஸ் மற்றும் குரோம் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் வினீத் ஜெயின், ஹேமந்த் பண்டாரி, அலேயா சென், அமித் ரவீந்தர்நாத் சர்மா மற்றும் சுஷில் சௌத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர்.
Also Read… கார்த்தியின் வா வாத்தியார் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு
பதாய் ஹோ படத்தின் கதை என்ன?
திருமண வயதில் இருக்கும் ஆயுஷ்மான் குராணாவிற்கு ஒரு தம்பியும் இருக்கிறார். இவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில் அம்மா ஹவுஸ் ஒய்ஃபாகவும் அப்பா ரயில்வேஸ் வேலை செய்து வருகிறார்கள். ஹேப்பி ஃபேமிலியாக இருக்கும் இவர்களது வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடைபெறுகிறது.
அது என்ன என்றால் ஆயுஷ்மான் குரானாவின் அம்மா திடீரென கர்பமாகிறார். இந்த செய்தி முதலில் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் அவமானமாக தோன்றுகிறது. அதன் பிறகு இதில் என்ன தவறு இருக்கிறது என்று அந்த குழந்தையை நன்றாக பெற்று எடுக்க குடும்பமே சப்போர்ட்டாக இருக்கிறது. இந்தப் படம் தான் தமிழில் ஆர்.ஜே.பாலாஜி வீட்ல விசேசம் என்ற பெயரில் ரீமேக் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… சிவகார்த்திகேயனின் படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு – வைரலாகும் வீடியோ