3 BHK படத்தைப் பாராட்டிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து – வைரலாகும் பதிவு
Director Ashwath Marimuthu: கோலிவுட் சினிமாவில் சென்சேஷ்னலான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவர் தற்போது சிம்புவை வைத்து படம் இயக்க உள்ளார். இந்த நிலையில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சமீபத்தில் சித்தார்த்தின் நடிப்பில் வெளியான 3 BHK படத்தைப் பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அஸ்வத் மாரிமுத்து
இயக்குநர் ஸ்ரீ கணேஷ் (Director Sri Ganesh) இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் 3 BHK. இந்தப் படம் கடந்த 4-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இந்தப் படத்தைப் பார்த்த பிரபலங்கள் மற்றும் விமர்சகர்கள் படத்தைப் பாராட்டி பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் 3 BHK படம் திரையரங்குகளில் வெளியான பிறகு ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை சமீபத்தில் திரையரங்குகளில் பார்த்த இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Director Ashwath Marimuthu) 3 BHK படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்தப் பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
3 BHK படத்தைப் பாராட்டி பதிவிட்ட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து:
அதன்படி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, 3 BHK படம் இயக்குநர் ஸ்ரீ கணேஷின் இயக்கத்தில் வெளியான அருமையான படம். தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் சார்பாக தயாரிப்பாளர் அருண் விஸ்வாவின் பிரமாண்ட தயாரிப்பின் மிக இனிமையான படம் இந்த 3 BHK.
அண்ணன் சித்தார்த்தையும் மீதாவையும் இந்த 3 BHK படத்தில் மிகவும் நேசித்தேன். மேலும் இசையமைப்பாளர் அம்ரித் படத்திற்கு மிகவும் அருமையான ஸ்கோர் செய்துள்ளார் என்றும் அஸ்வத் மாரிமுத்து அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து 3 BHK படம் குறித்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#3bhk is a very sweet film from @sri_sriganesh89 ❤️ great production @ShanthiTalkies Arun Viswa brother 🤗 loved Siddharth and meetha so much ❤️ fantastic score Amrith 🙂
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) July 7, 2025
திரையரங்குகளில் வெற்றிநடைப் போடும் 3 BHK படம்:
சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற பல மிடில் கிளாஸ் குடும்பங்களின் கனவை மையமாக வைத்து வெளியான இந்த 3 BHK படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சொந்த வீடு என்ற கனவு அவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு எட்டாத உயரத்தில் உள்ளது என்பதை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தில் மிகவும் அழகாக காட்டியிருப்பார்.
மிடில் கிளாஸ் குடும்பத்தின் சொந்த வீட்டின் கனவை எட்ட அவர்கள் எத்தனை தூரம் பயணிக்க வேண்டி இருக்கும் என்றும் அவர்களை சுற்றி இருக்கும் உறவினர்களால் அவர்கள் எத்தனை அவமானங்களை சந்திக்க நேரிடும் எபதை மிகவும் நேர்த்தியாக இந்தப் படம் காட்டியிருப்பதை ரசிகரக்ள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.