காலு மேல காலு போடு ராவண குலமே… திரையரங்குகளில் வெளியாகி இரண்டு ஆண்டுகளைக் கடந்தது ப்ளூ ஸ்டார் படம்!
2 Years Of Blue Star Movie: தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் விளையாட்டை மையமாக வைத்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ப்ளூ ஸ்டார் படம் 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

ப்ளூ ஸ்டார் படம்
தமிழ் சினிமாவில் கடந்த 25-ம் தேதி ஜனவரிமாதம் 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ப்ளூ ஸ்டார். இந்தப் படத்தை இயக்குநர் ஜெயக்குமார் இயக்கி இருந்தார். மேலும் இவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஜெயக்குமார் மற்றும் தமிழ் பிரபா இருவரும் இணைந்து எழுதி இருந்தனர். ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ் மட்டும் இன்றி உலக அளவில் விளையாட்டை மையமாக வைத்து வெளியாகும் படங்கள் தொடர்ந்து சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பளூ ஸ்டார் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ், பிருத்வி ராஜன், கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், லிசி ஆண்டனி, டி.என்.அருண் பாலாஜி, திவ்யா துரைசாமி, ராகவ் பார்த்திபன், கௌதம் ராஜ் சிஎஸ்வி, தருண் ஸ்ரீனிவாஸ், முல்லை அரசி, சஜு நவோதயா ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் கோவின் வசந்தா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
திரையரங்குகளில் வெளியாகி இரண்டு ஆண்டுகளைக் கடந்தது ப்ளூ ஸ்டார்:
கிராமத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு என்று இரண்டு பிரிவினர்கள் இடையே கிரிக்கெட் விளையாட்டு விளையாடுவதில் தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதில் யார் பெரியவர்கள் என்று காட்டுவதற்காக அவர்களிடையே தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. ஆனால் உங்க இரண்டு பேறையும்விட நாங்கள்தான் பெரியவர்கள் என்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தெரிவித்தபோதுதான் அவர்களுக்கு புரிந்தது தங்களின் நிலமை. இதனைத் தொடர்ந்து அவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது இரண்டு ஆண்டுகளைக் கடந்ததை படக்குழு கொண்டாடி வருகின்றது.
Also Read… புதிய உச்சத்தை தொட்டது கோல்டன் ஸ்பாரோ பாடல்… நீக் படக்குழு வெளியிட்ட பதிவு
ப்ளூ ஸ்டார் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
2 years since everyone from the gullies to the international stands saw the glory of the #BlueStar boys💙💫
A story made of friendships, sportsmanship, talent, hard work, love and Equality#2YearsOfBlueStar@beemji @BlueStarOffl @lemonleafcreat1 @SakthiFilmFctry @sakthivelan_b pic.twitter.com/Q2S8EDTvnR
— Neelam Productions (@officialneelam) January 25, 2026
Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் அட்லி – அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங்… வெளியானது புது தகவல்