பூஜையுடன் தொடங்கியது அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் புது படம்

Actor Ashok Selvan: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது நடிகை நிமிஷா சஜயன் உடன் இணைந்து புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

பூஜையுடன் தொடங்கியது அசோக் செல்வன் - நிமிஷா சஜயன் புது படம்

அசோக் செல்வன் - நிமிஷா சஜயன்

Published: 

20 Aug 2025 14:59 PM

நடிகர் அசோக் செல்வன் (Ashok selvan) கடந்த 2013-ம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனவர் அசோக் செல்வன். அந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இருந்தார். இதில் அசோக் செல்வன் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தாலும் அவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் பீட்சா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்தப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வரிசையில் தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், சம்டைம்ஸ், ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, நித்தம் ஒரு வானம், போர் தொழில், சபா நாயகன், ப்ளூ ஸ்டார், எமக்கு தொழில் ரொமான்ஸ் மற்றும் தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இறுதியாக அசோக் செல்வன் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் உடன் இணைந்து நடித்த தக் லைஃப் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக எந்தப் படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்து இருந்தனர். இந்த நிலையில் இவரது புதுப் படம் குறித்து தற்போது இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் இணைந்த புதுப் படத்தின் அப்டேட்:

இந்த நிலையில் இன்று அசோக் செல்வன் மற்றும் நிமிஷா சஜயன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியது. மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் நிமிஷா சஜயன் சித்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இறுதியாக தமிழ் சினிமாவில் டிஎன்ஏ படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் படத்தை இயக்குநர் மணிகண்டன் இயக்குகிறார். இவர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை வேல்ஸ் இண்டர்நேஸ்னல் ஃபிலிம்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர் அந்த பாலிவுட் நடிகருக்குதான் முதலில் சொன்னேன் – ஏ.ஆர்.முருகதாஸ்

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யா 46 படத்தில் அனில் கபூரா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கி அட்லூரி