Mr. X Movie: உண்மையான சம்பவ கதையில்.. ஆர்யா நடித்துள்ள ஸ்பை திரில்லர் மிஸ்டர் எக்ஸ் பட ட்ரெய்லர் வெளியானது!

Mr. X Movie Trailer: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஆர்யா. இவரின் நடிப்பில், இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியுள்ள ஸ்பை திரில்லர் திரைப்படம்தான் மிஸ்டர் எக்ஸ். இப்படம் விரைவில் வெளியாகின்ற நிலையில், இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.

Mr. X Movie: உண்மையான சம்பவ கதையில்.. ஆர்யா நடித்துள்ள ஸ்பை திரில்லர் மிஸ்டர் எக்ஸ் பட ட்ரெய்லர் வெளியானது!

மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர்

Updated On: 

09 Apr 2026 18:19 PM

 IST

கோலிவுட் சினிமாவில் விஷ்ணு விஷாலின் (Vishnu Vishal) FIR என்ற திரைப்படத்தை இயக்கி, மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் மனு ஆனந்த் (Manu Anand). இவரின் இயக்கத்தில் 2வது திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் மிஸ்டர் எக்ஸ் (Mr. X). இப்படத்தில் நடிகர் ஆர்யா (Arya) கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் (Gautham Ram Karthik) முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது டபுள் ஹீரோ படமாக தயார்க்கியுள்ளது. மேலும் இவர்களுடன் நடிகர்கள் மஞ்சு வாரியர் (Manju Warrier), சரத்குமார் (Sarathkumar), அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன் மற்றும் காளி வெங்கட் என பல்வேறு பிரபலன்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து இதுவரை மொத்தம் 2 பாடல்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இப்படமானது முழுக்க உண்மை சம்பவங்களை மையமாக கொண்ட, ஸ்பை திரில்லர் கதையில் தயாராகியுள்ளது. இப்படம் வரும் 2026 ஏப்ரல் 17ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகத் தயாராகியுள்ளது. அந்த வகையில் இன்று 2026 ஏப்ரல் 09ம் தேதியில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ரஜினி – கமல் இடையே இருக்கும் போட்டி எனக்கும் மோகன்லாலுக்கும் இடையே இல்லை – மம்முட்டி ஓபன் டாக்

ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

மிஸ்டர் எக்ஸ் படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:

ஹாலிவுட் பட ரேஞ்சில் இப்படத்தின் விஷுவல் அமைந்துள்ளது. இந்த படத்தில் ஆர்யா, சரத்குமார், மஞ்சு வாரியர் மற்றும் கௌதம் ராம் கார்த்திக் போன்ற நடிகர்கள் மிக முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இதில் ஆர்யா, கௌதம் கார்த்தி மற்றும் மஞ்சு வாரியர் ஆகிய மூவரும் ராணுவ உளவாளிகளாக நடித்துள்ளனர். அந்த வகையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தின் கதைக்களம் என்ன:

இந்த மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தை இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியுள்ள நிலையில், இப்படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இப்படமானது கடந்த 1965ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை, நடந்த உண்மையான சம்பவங்களை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாம். இப்படம் இந்தியாவில் நடந்த ஸ்பை திரில்லர் தாக்குதல்கள் மற்றும் நிஜ சம்பவங்களை ஒருங்கிணைத்து இயக்கப்பட்டுள்ளதாம்.

இதையும் படிங்க: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட கதையே அப்படிதான்.. முழுக்க ஜாலியான படம் – மமிதா பைஜூ பேச்சு!

இதில் ஆர்யா ஸ்பையாக நடித்துள்ள நிலையில், மஞ்சு வாரியர் மிக முக்கிய அதிகாரியாக நடித்துள்ளாராம். இப்படத்தை துரந்தர் திரைப்படத்துடன் மக்கள் ஒப்பிட்டு வருகின்றனர். ஆனால் இதை இயக்குநர் மனு ஆனந்த் முற்றிலும் மறுத்துள்ளார். மிஸ்டர் எக்ஸ் படம் துரந்தர் படம் போன்று இருக்காது என அவர் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?