Ajith Kumar : அஜித்தின் தீனாவினால் அந்த வாய்ப்பு கிடைத்தது – ஏ.ஆர். முருகதாஸ் உடைத்த உண்மை!

AR Murugadoss About Ajith Kumar : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் ஏ.ஆர். முருகதாஸ். இவரின் இயக்கத்தில் மதராஸி படமானது வெளியீட்டிற்கு காத்திருக்கிறது, இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஏ.ஆர். முருகதாஸ், அஜித் சாருடன் தீனா படத்தை இயக்கியதால் மட்டுமே, ஆமிர் கானுடன் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

Ajith Kumar : அஜித்தின் தீனாவினால் அந்த வாய்ப்பு கிடைத்தது - ஏ.ஆர். முருகதாஸ் உடைத்த உண்மை!

அஜித் குமார் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ்

Updated On: 

23 Aug 2025 22:52 PM

இயக்குநர் ஏ.ஆர் . முருகதாஸ் (AR. Murugadoss) இயக்கத்தில் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில், இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் சிக்கந்தர் (Sikandar). இந்த படத்தில் சல்மான்கான் கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இப்படம் வெளியானது. இதை அடுத்ததாக தமிழில் சிவகார்த்திகேயனை (Sivakarthikeyan) வைத்து மதராஸி (Madharaasi) என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இப்படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றின் போது பேசிய ஏ.ஆர். முருகதாஸ், அஜித் குமாருடன் (Ajith Kumar)  தீனா படத்தில் பணியாற்றியதால் மட்டுமே, ஆமிர் கானுடன் (Aamir khan) படம் இயக்கும் வாய்ப்புகள் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர் பேசியது குறித்து தெளிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : மதராஸியில் மாறுபட்ட சிவகார்த்திகேயன்.. ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன விஷயம்!

அஜித் குறித்து பேசிய ஏ.ஆர். முருகதாஸ் :

அந்த நேர்காணலில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் அஜித் குமார் குறித்தும், அவரின் நட்பு குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த ஏ.ஆர். முருகதாஸ், ” அஜித் குமார் சார், நண்பர்கள் தினத்தோடு பகிரப்பட்ட புகைப்படமானது, அவரின் பிறந்தநாளில் எடுக்கப்பட்டது. அதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே அவர் அழைத்திருந்தார். நானும், அஜித் சாரை அடிக்கடி சந்திப்பது இல்லை, அவர் எப்போது எங்கிருக்கிறார் என தெரியாது. நானே சுரேஷ் சந்திரா சாரிடம்தான் கேட்டு தெரிந்துகொள்வேன்.

இதையும் படிங்க : விஜய்யுடன் ஒரு படம்.. மிஸ்ஸான வாய்ப்பு – இயக்குநர் AR முருகதாஸ்!

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் லேட்டஸ்ட் எக்ஸ் பதிவு :

எப்படி பார்த்தாலும் எனக்கு இயக்குநராக முதல் வாய்ப்பை கொடுத்தவர் அஜித் குமார்தான். எனது முதல் படத்தில் அஜித் குமார் சாரை வைத்து தீனா திரைப்படத்தை இயக்கிய காரணத்தால் மட்டுமே, எனது 5வது படத்தை ஆமிர் கான் சாரை வைத்து இயக்க முடிந்தது. ஏனென்றால் அஜித் சாரை வைத்து முதல் படம் யாராலும் பண்ணமுடியாது, 5 படம் ஹிட் கொடுத்தால் தான் அஜித் சாருடன் படம் பண்ணமுடியும். ஆனால் நான் முதல் படத்தையே அஜித் சாரை வைத்து இயக்கியதால், எனது 5வது படத்தை ஆமிர் கானுடன் பணியாற்ற முடிந்தது” என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஓபனாக பேசியிருந்தார்.