குடும்பத்தினருடன் சூர்யாவின் ஹிட் பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஏ.ஆர்.முருகதாஸ் – வைரலாகும் வீடியோ

கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் பட்டியளில் உள்ளவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பல படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் நடந்த குடும்ப விழா ஒன்றில் தனது குடும்பத்தினர் உடன் இணைந்து நடிகர் சூர்யாவின் ஹிட் பாடலுக்கு நடனம் ஆடியது தற்போது வைரலாகி வருகின்றது.

குடும்பத்தினருடன் சூர்யாவின் ஹிட் பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஏ.ஆர்.முருகதாஸ் - வைரலாகும் வீடியோ

ஏ.ஆர்.முருகதாஸ்

Published: 

16 Jun 2025 14:53 PM

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (Director AR Murugadoss). இவர் தற்போது சிவகார்திகேயனின் (Actor Sivakarthikeyan) நடிப்பில் அவரது 23-வது படமான மதராஸி படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் டான்ஸ் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றது. அதன்படி சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இந்தப் படத்தில் இருந்து வெளியான கனிமா பாடல் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடல் மட்டும் இன்றி பாடலில் வரும் நடன அசைவுகளும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு தனது மகள் மற்றும் குடும்பத்தினர் உடன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நடனம் ஆடியுள்ளார். கனிமா பாடலில் சூர்யா என்ன மாதிரியான நடன அசைவுகளை போடுவாறோ அதே மாதிரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நடனம் ஆடியுள்ளது ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் டான்ஸ் வீடியோ:

ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியாகும் மதராஸி படம்:

நடிகர் சிவகார்த்திகேயன் தனது 24-வது படத்திற்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவான சிக்கந்தர் படத்தில் பிசியானார்.

இதனால் தொடர்ந்து சிவகார்திகேயன் மற்றப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் சிக்கந்தர் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு சிவகார்த்திகேயனின் மதராஸி படம் முழு வேகத்தில் எடுத்து முடிக்கப்பட்டது. மேலும் இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகை ருக்மிணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிஜூ மேனன், விக்ராந்த், பிரேம் குமார், சாச்சனா நமிதாஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் படம் வெளியாக உள்ளதால் ரசிகரக்ள் ஆவளுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.