மலையாள சினிமாவில் என்னை நடிக்கத் தெரியவில்லை என கிண்டலடித்தார்கள் – நடிகை அனுபமா பரமேசுவரன் ஓபன் டாக்

Actress Anupama Parameswaran About Malayalam Cinema: நடிகை அனுபமா பரமேசுவரன் சமீபத்தில் தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட போது மலையாள சினிமாவில் தான் ஒதுக்கப்பட்டது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகின்றது.

மலையாள சினிமாவில் என்னை நடிக்கத் தெரியவில்லை என கிண்டலடித்தார்கள் - நடிகை அனுபமா பரமேசுவரன் ஓபன் டாக்

நடிகை அனுபமா பரமேசுவரன்

Updated On: 

17 Jun 2025 18:43 PM

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி பின்பு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுபமா பரமேசுவரன் (Anupama Parameswaran). இவர் சமீபத்தில் மலையாளத்தில் தனது நடிப்பில் உருவாகியுள்ள ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதில் தான் ஏன் மலையாள சினிமாவில் இத்தனை ஆண்டுகளாக நடிக்கவில்லை என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதன்படி நடிகை அனுபமா பரமேசுவரன் பேசியதாவது “நிறைய பேர் என்னை ட்ரோல் பண்ணி, எனக்கு நடிக்க வராதுன்னு சொல்லிட்டாங்க. இதையெல்லாம் பொருட்படுத்தாம, இந்தப் படத்தோட இயக்குநர் என்னை நாயகியா நடிக்க வைத்துள்ளார். இந்தப் படத்துக்கு ஒரு மனசு இருக்கு, அது வேறு யாரும் இல்லை ஜானகி தான். என்னை நம்பி அந்த ஜானகி கதாப்பாத்திரத்தை கொடுத்ததற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

அனுபமா பரமேசுவரனின் ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா:

மலையாளத்தில் கடந்த 2015-ம் வெளியான பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை அனுபமா பரமேசுவரன். மலையாளத்தில் அறிமுகம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே அவர் மலையாள சினிமாவில் நடித்துள்ளார். ஆனால் அதனைத் தொடர்ந்து அவர் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் அதிக அளவில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை அனுபமா பரமேசுவரன் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் எண்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி தற்போது இயக்குநர் பிரவீன் நாராயணன் எழுதி இயக்கி உள்ள படம் ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா. இந்தப் படத்தில் நடிகர் சுரேஷ் கோபி நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை அனுபமா பரமேசுவரன் நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மாதவ் சுரேஷ், ஸ்ருதி ராமச்சந்திரன், திவ்யா பிள்ளை, அஸ்கர் அலி, பைஜு சந்தோஷ், கோட்டயம் ரமேஷ், ஷோபி திலகன், ரதீஷ் கிருஷ்ணன், ஜெய் விஷ்ணு, ஷபீர் கான், ஜோஸ் செங்கனூர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 27-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அனுபமா பரமேசுவரன் வெளியிட்ட ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா அப்டேட்:

தென்னிந்திய மொழிகளில் வரிசைக்கட்டும் நடிகை அனுபமா பரமேசுவரனின் படங்கள்:

தமிழில் நடிகை அனுபமா பரமேசுவரன் இறுதியாக நடிகர் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து ட்ராகன் படத்தில் நடித்து இருந்தார். இதில் அனுபமாவின் கதாப்பாத்திரம் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது நடிகை அனுபமா பைசன் மற்றும் லாக்டவுன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அதே வேலையில் தெலுங்கு சினிமாவில் நடிகை அனுபமா பரமேசுவரன் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் பர்தா. இந்தப் படத்தின் அறிவிப்புகள் அவ்வபோது வெளியாகி ரசிகரக்ளிடையே கவனம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.