சர்ச்சைகளில் சிக்கிய நயன்தாராவின் அன்னபூரனி படம் ஓடிடியில் ரிலீஸ்!

Annapoorani Movie: நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் அன்னபூரனி. இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான போது இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக கூறி பல எதிர்ப்புகள் எழுந்த நிலையில் படத்தை ஓடியில் இருந்து நீக்கினர்.

சர்ச்சைகளில் சிக்கிய நயன்தாராவின் அன்னபூரனி படம் ஓடிடியில் ரிலீஸ்!

அன்னபூரனி படம்

Published: 

30 Sep 2025 16:52 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா (Actress Nayanthara). மலையாள சினிமாவில் இவர் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் இவரை அதிக அளவில் பிரபலமாக்கியது தமிழ் சினிமா தான். தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நடிகை நயன்தாராவின் நடிப்பில் கடந்த 1-ம் தேதி டிசம்பர் மாதம் 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா உடன் இணைந்து நடிகர்கள் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், ரேணுகா, சச்சு, ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, பார்வதி டி, பூர்ணிமா ரவி, செஃப் ஆர்.கே. டிஎஸ்ஆர் சீனிவாசன், குழந்தை சம்யுக்தா, சோம் சேகர், முகமது இர்பான், பிரியதர்ஷினி ராஜ்குமார், திடியன், ஜெகன் கிருஷ்ணன் என பலர் இந்தப் படத்தில் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தனர்.

இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணன் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இவர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமானங்களான ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பாக தயாரிப்பாளர்கள் ஜதின் சேதி மற்றும் ஆர். ரவீந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர்.

மீண்டும் ஓடிடியில் வெளியாகும் அன்னபூரணி படம்:

இந்த நிலையில் முன்னதாக இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட்டது. அபோது படத்தில் இந்து மதத்தை புன்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியது. இதன் காரணமாக படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தை மீண்டும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… இட்லி கடை படத்திலிருந்து வெளியானது புதிய போஸ்டர் – வைரலாகும் பதிவு

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிரபல தெலுங்கு நடிகருடன் இணையும் நடிகை மடோனா செபாஸ்டியன்