ரஜினி, கமல், விஜய்… நீங்க யார் ரசிகர்? அனிருத்தின் மாஸ் பதில்

Anirudh talks about Rajini, kamal and Vijay: பான் இந்திய அளவில் ராக் ஸ்டாராக வலம் வருகிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் மற்றும் விஜய் ஆகியோரில் யாரைப் பிடிக்கும் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

ரஜினி, கமல், விஜய்... நீங்க யார் ரசிகர்? அனிருத்தின் மாஸ் பதில்

அனிருத்

Published: 

24 Feb 2026 11:37 AM

 IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அடுத்தடுத்தப் படங்களில் இசையமைத்து வருகிறார். இவரின் பாடல்கள் தொடர்ந்து சூப்பர் ஹிட் அடித்துவரும் நிலையில் அவரது ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் அனிருத்தை ராக் ஸ்டார் என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அனிருத் இசையில் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 5 படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்த 2026-ம் ஆண்டும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் படங்களில் லிஸ்ட் வரிசையாக உள்ளது. அதன்படி நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிலம்பரசன் மற்றும் நானி என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுதொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் அனிருத் சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரஜினி, கமல், விஜய்… நீங்க யார் ரசிகர்? அனிருத்தின் மாஸ் பதில்:

அதன்படி சமீபத்தில் அனிருத் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் மற்றும் விஜய் ஆகிய நடிகர்களின் நீங்க யாருடைய ரசிகர் என்று அனிருத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அனிருத், ஒரு நடிகரின் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது நான் அவர்களின் ரசிகனாக மாறிவிடுகிறேன். இசையில், யாருக்கும் தனிப்பட்ட விருப்பங்களை வைத்திருப்பது உண்மையில் சாத்தியமில்லை. ஆன்லைனில் ரசிகர் போர்கள் நடக்கலாம் என்றாலும், எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சில பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றியதை உண்மையிலேயே அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் என்று அனிருத் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… 7 கோடி மக்கள் பார்க்கும் படத்தை 5 பேர் எப்படி முடிவு செய்யலாம் – சென்சார் போர் குறித்து விஷால் சொன்ன கருத்து

இணையத்தில் வைரலாகும் அனிருத்தின் பேச்சு:

Also Read… 19 ஆண்டுகளை நிறைவு செய்தது கார்த்தி நாயகனாக அறிமுகமான பருத்திவீரன் படம்

Follow Us
Related Stories
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்