Anirudh Ravichander : SK- வின் பண்ணா.. நான் வின் பண்ண மாறி.. எமோஷனலாக பேசிய அனிருத்!

Anirudh Emotional Speech : தென்னிந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் அனிருத் ரவிசந்தர். இவரின் இசையமைப்பில் மதராஸி படமானது வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடையில், நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து அனிருத் எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Anirudh Ravichander : SK- வின் பண்ணா.. நான் வின் பண்ண மாறி.. எமோஷனலாக பேசிய அனிருத்!

அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சிவகார்த்திகேயன்

Published: 

25 Aug 2025 16:03 PM

இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாம் தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இவரின் இசையமைப்பிலும் மற்றும் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பிலும் உருவாகியிருக்கும் திரைப்படம் மதராஸி (Madharaasi). இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (AR. Murugadoss) இயக்கியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படமானது , முற்றிலும் ஆக்ஷன் கதைக்களத்துடன் தயாராகியிருக்கிறது. இந்த மதராஸி படமானது வரும் 2025, செப்டம்பர் 5 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

சுமார் 2 வருடங்களுக்கு பின் மீண்டும் சிவகார்த்திகேயனின் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி  2025, ஆகஸ்ட் 24ம் தேதியில் நடைபெற்றிருந்தது.

இதையும் படிங்க : குட்டி தளபதி.. திடீர் தளபதினு சொல்லுறாங்க.. – தளபதி விஜய் குறித்து சிவகார்த்திகேயன் பேச்சு!

இந்த நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய அனிருத், நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து எமோஷனலாக பேசியிருந்தார். அவர் அதில் “சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றால், நான் வெற்றி பெற்றது போல” என பேசியிருந்தார். அவர் பேசியது குறித்து விவரமாக பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் குறித்து எமோஷனலாக பேசிய அனிருத் :

அந்த நிகழ்ச்சியின்போது , இசையமைப்பாளார் அனிருத் ரவிசந்தர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருந்தார். அப்போது மேடையில் பேசிக்கொண்டிருந்த அனிருத், நடிகர் சிவகார்த்திகேயன் குறித்தும் பேசியிருந்தார். அப்போது அவர், ” என்னைக்காவது ஒரு நாளில் நானும் Field Out ஆவேன்.. அப்போது நான் சிவகார்த்திகேயனின் வெற்றியை கண்டு மிகவும் சந்தோஷப்படுவேன். எஸ்கே வின் பண்ணா, நான் வின் பண்ண மாதிரி” என்றார் இசையமைப்பாளர் அனிருத். இந்த தகவலானது தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : ஜீனி ஷூட்டிங்கில் நடந்த காமெடி.. கல்யாணி பிரியதர்ஷன் பகிரும் தகவல்!

சிவகார்த்திகேயன் குறித்து அனிருத் பேசிய வீடியோ பதிவு

சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் கூட்டணி :

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் கூட்டணியில் இதுவரை பல படங்கள் வெளியாகியிருக்கிறது. ரெமோ முதல் டான் வரை பல்வேறு படங்களில் சிவகார்த்திகேயனுடன் அனிருத் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயனுடன் இதுவரை சுமார் 8 திரைப்படங்களுக்கு இசையமைப்பாளார் அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றியிருக்கிறார். இது குறித்து அவர் மதராஸி பட நிகழ்ச்சி மேடையிலும் ஓபனாக பேசியிருந்தார்.