பிசாசு 2 படத்தின் நிர்வாண காட்சி குறித்து ஓபனாக பேசிய ஆண்ட்ரியா – வைரலாகும் வீடியோ
Actress Andrea Jeremiah: தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகம் ஆகி தற்போது நடிகையாகவும் கலக்கி வருகிறார் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. இவரது நடிப்பில் சமீபத்தில் மாஸ்க் படம் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட், பாடகி என வலம் வந்தவர் ஆண்ட்ரியா ஜெர்மையா. இவர் தமிழ் சினிமாவில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையாவின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி மலையாளம் மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து நாயகியாக நடிக்கத் தொடங்கினார் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. இந்திய சினிமாவைப் பொருத்தவரை நாயகியாக நடிப்பவர்கள் தொடர்ந்து நாயகியாக மட்டுமே நடித்து வருவார்கள். வேறு ஒரு சிறிய கதாப்பாத்திரதில் கூட நடிக்கத் தயங்குவார்கள். ஆனால் நடிகை ஆண்டியா ஜெர்மையா இந்த விசயத்தில் விதிவிலக்கு என்றே சொல்லலாம்.
ஆம் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா தமிழ் சினிமாவில் நடித்தால் நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் முக்க கதாப்பாத்திரம் வில்லி கதாப்பாத்திரம் என இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த வாரம் தமிழ் சினிமாவில் வெளியான படம் மாஸ்க். இந்தப் படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தற்போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
பிசாசு 2 படத்தின் நிர்வாண காட்சி குறித்து ஓபனாக பேசிய ஆண்ட்ரியா:
இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, பிசாசு 2 படத்தில் ஆரம்பத்தில் ஒரு நிர்வாணக் காட்சி எழுதப்பட்டது, ஆனால் அது படப்பிடிப்பின் போது அகற்றப்பட்டது. படத்தில் காம தருணங்கள் உள்ளன, ஆனால் நிர்வாணம் இல்லை. மிஷ்கின் சார் பிழைப்புக்காக பிசாசு 2 படத்தில் நடிக்கவில்லை. அவர் பல பெரிய நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார் என்று நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா வெளிப்படையாக பேசியுள்ளார்.
இணையத்தில் கவனம் பெறும் ஆண்ட்ரியாவின் பேச்சு:
#Andrea about nudity in #Pisasu2
When a matured dir. #Mysskin asks, I’ve to trust him. He wrote many but didn’t shoot. There were ppl who told me to pull down my skirt. Everything lies in intent. There are more erotic scenes in Pisasu2 but no nudity 😲pic.twitter.com/GUfJ4ViXfG
— VCD (@VCDtweets) November 26, 2025
Also Read… பிக்பாஸில் வியானாவால் கடுப்பான அமித்… அழுகும் வியானா – வைரலாகும் வீடியோ