Dhanush : தனுஷின் பிறந்தநாள்: ரீ-ரிலீசாகும் ‘அம்பிகாபதி’ திரைப்படம்!
Dhanush Ambikapathy Movie Re- Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவரின் நடிப்பில் வெளியான முதல் இந்தி திரைப்படம் ராஞ்சனா, அந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியாகியிருந்தது. இந்த படமானது சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் வெளியாகவுள்ளது.

அம்பிகாபதி திரைப்படம்
நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் வெளியாகி பான் இந்தியா அளவிற்கு ஹிட்டான திரைப்படம்தான் அம்பிகாபதி (Ambikapathy). இந்த படமானது பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல். ராய் (Anand L. Roy) இயக்கியிருந்தார். தனுஷ் இந்த திரைப்படத்தின் மூலம்தான் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்பிகாபதி திரைப்படமானது கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இந்த படமானது இந்தி மொழியில் ராஞ்சனா (Ranjanaa) என்றும் தமிழில் அம்பிகாபதி என்றும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாகப் பாலிவுட் நடிகை சோனம் கபூர் (Sonam Kapoor) இணைந்து நடித்திருந்தார். சுமார் ரூ. 32 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்தப் படம், சுமார் ரூ. 105 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில், இந்த திரைப்படமானது சுமார் 12 வருடங்களுக்குப் பின் தனுஷின் பிறந்தநாளையொட்டி வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் பிறந்தநாள் வரும் 2025, ஜூலை 28ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அதைத் தொடர்ந்து 2025, ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இப்படமானது ரீ-ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தினத்தந்தி செய்தி இணையதளத்திலும் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரீ-ரிலீசாகும் தனுஷின் அம்பிகாபதி திரைப்படம் :
மாபெரும் வெற்றி பெற்ற தனுஷின் ” அம்பிகாபதி ” திரைப்படம் மீண்டும் வெளியாகிறது
UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED வெளியிடும் தனுஷின் அம்பிகாபதி திரைப்படம் !
இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படத்தினை, UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED நிறுவனம், புத்தம் புதிய… pic.twitter.com/GVkOntdiUJ— AMN Movie Talks (@amnmovietalks) July 8, 2025
மீண்டும் இணைந்த தனுஷ் -ஆனந்த் எல். ராய் கூட்டணி :
ரஞ்சனா படத்தை தொடர்ந்து, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் கூட்டணியில் புதிய படம் உருவாகிவருகிறது. தனுஷின் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த இந்தி படத்திற்குத் தேரே இஷ்க் மெய்ன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :தனுஷின் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? வைரலாகும் தகவல்
நடிகர் தனுஷ் இந்த திரைப்படத்தில் விமான அதிகாரியாக நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அம்பிகாபதி படத்தை தொடர்ந்து சுமார் 12 வருடங்களுக்குப் பின் இவர்களின் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை கிருத்தி சனோன் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு பான் இந்திய பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 3BHK பட வரவேற்பு… இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத்திற்கு பரிசு கொடுத்த சரத்குமார்!
இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2025, நவம்பர் மாதத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அம்பிகாபதி படத்தைத் தொடர்ந்து இப்படம் தனுஷின் இந்தியில் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.