Madharaasi: திரையரங்குகளில் ரூ100 கோடி வசூல்.. ஓடிடியில் எப்போது வெளியாகிறது சிவகார்த்திகேயனின் மதராஸி?
Madharaasi Movie OTT Release Update: நடிகர் சிவகார்திகேயன் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மதராஸி. இப்படமானது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் காதல் கதைக்களத்தில் கடந்த 2025 செப்டம்பர் 5ம் தேதியில் வெளியானது. தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் மதராஸி
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR. Murugadoss) மற்றும் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) கூட்டணியில் இறுதியாக வெளியான திரைப்படம் மதராஸி (Madharaasi). இந்த படத்தில் சிவகார்த்திகேயன் அதிரடி ஆக்ஷ்ன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணியில் இந்த படமானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மதராஸி படமானது கடந்த 2023ம் ஆண்டில் SKxARM என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை அடுத்ததாக இப்படத்தின் ஷூட்டிங் , தமிழகம் மற்றும் இலங்கை போன்ற பகுதிகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்திருந்தது. ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் அனிருத்தின் (Aniruth) இசையமைப்பில் கடந்த 2025 செப்டம்பர் 5ம் தேதியில் மிக பிரம்மாண்டமாக வெளியாகியிருந்தது.
இப்படம் வெளியான முதல் நாளில் கலவையான விமர்சனங்களை பெற்றுவந்தது. மேலும் 2 நாட்களில் உலக அளவில் வசூலில் சுமார் ரூ 50 கோடியை வசூல் செய்திருந்தது. இந்நிலையில் இப்படமானது வெளியாகி 3 வாரத்தை கடந்த நிலையில், ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஷேன் நிகம் – சாந்தனுவின் ‘பல்டி’ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
மதராஸி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது :
சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி வசந்தின் கூட்டனிடயில் வெளியான இந்த மதராஸி படமானது வரும் 2025 அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் 1ம் தேதியில் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகவுள்ளதாம்.
இதையும் படிங்க : இந்த விருது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது.. கலைமாமணி விருது வென்ற அனிருத் நெகிழ்ச்சி!
இந்த தகவலானது ஓடிடி பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் இந்த மதராஸி படமானது 4 வாரத்திற்கு முன்னே ஓடிடியில் வெளியாகிறதா? என ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அமேசன் ப்ரைம் ஓடிடி நிறுவனம் வெளியிட்ட மதராஸி பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு :
Brace yourself for a mad ride with yours truly Madharaasi ❤️🔫#MadharaasiOnPrime, Oct 1@SriLakshmiMovie @Siva_Kartikeyan @ARMurugadoss @anirudhofficial @VidyutJammwal #BijuMenon @rukminitweets @actorshabeer @vikranth_offl @SudeepElamon pic.twitter.com/McLGlMBEN4
— prime video IN (@PrimeVideoIN) September 26, 2025
சிவகார்த்திகேயனின் புதிய படங்கள்
மதராஸி படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகிவரும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ளது. இந்த படமானது உண்மையான கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இதில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தை அடுத்தாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ஒரு படத்திலும், இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்திலும் மற்றும் குட் நைட் பட இயக்குநர் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.