Alphonse Puthren: ஜேசன் சஞ்சய்க்கு அதில் ஆர்வமில்லை… ஆனால் இயக்குவதில் உறுதியாக உள்ளார்- அல்போன்ஸ் புத்ரன்!

Alphonse Puthren About Thalapathi Vijay And Jason Sanjay: தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் தற்போது சினிமாவில் நடிகராக நடித்துவருபவர்தான் அல்போன்ஸ் புத்ரன். இவரின் நடிப்பில் இறுதியாக பல்டி என்ற படம் வெளியாகியிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர் தளபதி விஜய் மற்றும் ஜேசன் சஞ்சய் குறித்து வெளிபபடையாக பேசியுள்ளார்

Alphonse Puthren: ஜேசன் சஞ்சய்க்கு அதில் ஆர்வமில்லை... ஆனால் இயக்குவதில் உறுதியாக உள்ளார்- அல்போன்ஸ் புத்ரன்!

அல்போன்ஸ் புத்ரன் மற்றும் ஜேசன் சஞ்சய்

Published: 

26 Dec 2025 20:50 PM

 IST

மலையாள சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் அல்போன்ஸ் புத்ரன் (Alphonse Puthren). இவர் கடந்த 2015ம் ஆண்டில் வெளியான பிரேமம் (Premam) என்ற திரைப்படத்தின் மூலமாக மக்களிடையே பிரபலமானார். இவரின் இயக்கத்தில் வெளியான இப்படம் தமிழ், தெலுங்கு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. அந்த விதத்தில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்ததாக இவரின் இயக்கத்தில் கோல்ட் (Gold) போன்ற திரைப்படம் வெளியாகியிருந்தது ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை. மேலும் இவரின் இயக்கத்தில் தமிழில் கிப்ட் (Gift) என்ற படம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இயக்குநரான இவர், தற்போது படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இவரின் நடிப்பில் கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் பல்டி (Balti) என்ற படம் வெளியாகியிருந்தது. அதில் “சோடா பாபு” (soda Babu) என்ற வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அதில் அவர், தளபதி விஜய் (Thalapathy Vijay) மற்றும் அவரின் மகன் ஜேசன் சஞ்சய்க்கும் (Jesan Sanjay) புதிய படத்திற்கானக் கதை சொன்னது குறித்த மனம் திறந்துள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் இரட்டை வேடத்தில் நடிகர் அருண் விஜய்… ரெட்ட தல வெற்றியடைந்தா? இல்லையா? விமர்சனம் இதோ!

தளபதி விஜய் மற்றும் ஜேசன் சஞ்சய் குறித்து பேசிய அல்போன்ஸ் புத்ரன்:

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அல்போன்ஸ் புத்ரன், “நான் தளபதி விஜய் சாருக்கும் மற்றும் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய்க்கும் ஒரு கதை கூறியிருந்தேன். ஆனால் ஜேசன் சஞ்சய் ஒரு இயக்குநராக இருக்கவிரும்புகிறார். ஜேசன் சஞ்சய்க்கு நடிப்பதை விடவும், திரைப்படங்களை இயக்க மற்றும் படங்களை தயாரிக்கவே அதிகம் ஆர்வம் உள்ளது” என்று அந்த நேர்காணலில் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவிற்காக மலேசியா புறப்பட்ட விஜய் – வைரலாகும் வீடியோ

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்:

இவர் தற்போது படங்களை இயக்குவது மற்றும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். அந்த வகையில் இவர் மேலும் ஒரு புது படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தாவுக்காக ஏர்போர்ட்டில் காதலுடன் காத்திருந்த ராஜ்..... வைரலாகும் வீடியோ
இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் சாதனையுடன் பாக்ஸ் ஆபிஸ் அதிர வைத்த துரந்தர் படம்..
அதிகமாக சாப்பிட்ட வருங்கால மனைவி.. நஷ்ட ஈடு வழங்க தொடுத்த வழக்கு..
ஜப்பானில் கடைப்பிடிக்கப்படும் மெட்டபாலிக் லா.. அப்படி என்ன சட்டம் இது?