Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Akshara Haasan : தனது பெயரில் மோசடி… எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்ட அக்ஷரா கமல்ஹாசன்!

Akshara Haasan Instagram Post : தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்து வருபவர் கமல்ஹாசன். இவருக்கு ஸ்ருதி ஹாசன் மாறும் அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உண்டு. அதில் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசன் இணையப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அவர் அதில் தனது குடும்ப பெயரைப் பயன்படுத்தி, நபர் ஒருவர் செய்துவரும் மோசடி குறித்து எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளார்.

Akshara Haasan : தனது பெயரில் மோசடி… எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்ட அக்ஷரா கமல்ஹாசன்!
அக்ஷரா ஹாசன் மற்றும் கமல் ஹாசன் Image Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 05 Jun 2025 19:14 PM

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிறபலமிக்க நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கமல்ஹாசன் (Kamal Haasan) . இவரின் இரண்டாவது மகள்தான் அக்ஷரா கமல்ஹாசன் (Akshara Kamal Haasan). இவர் இந்தி சினிமாவின் மூலம் ஹீரோயினியாக சினிமாவில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து சில தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார். இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இவரின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகை அக்ஷரா ஹாசன் எச்சரிக்கை பதிவை (Warning log)  வெளியிட்டுள்ளார். தங்களின் குடும்ப பெயரைப் பயன்படுத்தி நபர் ஒருவர் மோசடி (Fraud) செய்து வருவதாகவும், அது தொடர்பாகப் புகார் அழைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

தனது பெயரை அக்ஷரா ஹாசன் என்ற பெயரை பயன் படுத்தி, நான் படத்தை தயாரிக்கப்போவதாகவும், அதற்காக ஊட்டியில் ஆபிஸ் வைத்திருப்பதாகவும் மோசடியில் நபர் ஒருவர் இறங்கியிருப்பதாக ரசிகர்களுக்குத் தெளிவு படுத்தியுள்ளார். இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இது போன்ற செய்திகளைக் கேட்டு ஏமாறவேண்டாம் என்றும் அவர் பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அக்ஷரா ஹாசன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Aksharaa Haasan (@aksharaa.haasan)

 

இந்த பதிவில் நடிகை அக்ஷரா ஹாசன், “ஒரு நபர் எனது பெயர் மற்றும் எனது குடும்ப பெயரைப் பயன்படுத்தி, நான் திரைப்படம் தயாரிக்கவுள்ளதாகவும், அது தொடர்பாக ஊட்டியில் ஆபிஸ் போடா உள்ளதாகவும் நபர் ஒருவர் பலரையும் ஏமாற்றி வருகிறார். அந்த தகவலானது முற்றிலும் போலியான தகவல், அந்த நபருடன் எங்களுக்கு இல்லை. இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். அதனால் அந்த நபரிடம் இருந்து ஜாக்கிரதையாக இருங்கள்” என நடிகை அக்ஷரா ஹாசன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அக்ஷரா ஹாசனின் நடிப்பில் வெளியான படங்கள் :

கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசன், கடந்த 2015ம் ஆண்டு தனுஷ் மற்றும் அமிதாப் பச்சனின் நடிப்பில் வெளியான ஷமிதாப் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இந்த இந்தி படத்தில் முக்கிய ரோலில் அவர் நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து மேலும் ஒரு இந்தி படத்திலும் நடித்திருந்தார். இவரின் முதல் தமிழ் அறிமுகமாகி அமைந்த படம் விவேகம்.

நடிகர் அஜித் குமாரின் விவேகம் படத்தில் முக்கிய ரொளி நடித்து சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தின் மூலம் அவருக்கு அந்த அளவிற்குப் பிரபலம் கிடைக்கவில்லை. மேலும் நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் என்ற படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார். கடந்த 2019ம் ஆண்டு வெளியான இப்படத்தை ராஜேஷ் எம் செல்வா இயக்க நடிகர் கமல்ஹாசன் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அக்கினி சிறகுகள் என்ற படத்தில் நடித்து வருவதாகவும் கூ