Ajith Kumar: ஸ்பெயினில் நடைபெற்ற கார் ரேஸில் வெற்றிபெற்ற அஜித் குமாரின் அணி.. எந்த இடம் தெரியுமா?

Ajith Kumars team wins In Barcelona: நடிகர் அஜித் குமார் கடந்த 2024ம் ஆண்டு முதல் கார் ரேஸ் போட்டியில் தீவிரமாக கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஸ்பெயினில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேஸிலும், தனது அணியுடன் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டார். இந்த போட்டியில் அஜித் குமாரின் அணி வெற்றிபெற்றுள்ளது.

Ajith Kumar: ஸ்பெயினில் நடைபெற்ற கார் ரேஸில் வெற்றிபெற்ற அஜித் குமாரின் அணி.. எந்த இடம் தெரியுமா?

கார் ரேஸில் வெற்றிபெற்ற அஜித் குமார் அணி

Published: 

28 Sep 2025 20:38 PM

 IST

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் இவர் சினிமாவை தாண்டியும், கார் ரேஸ் (Car Race) போட்டிகளில் தீவிரமாக பங்கேற்று வருகிறார். இவரின் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் தொடக்கத்தில் நிறைவடைந்த நிலையில், அதை தொடர்ந்து கார் ரேஸ் போட்டிக்கான பயிற்சியில் நடிகர் அஜித் குமார் இறங்கினார். கடந்த 8 மாதங்களாக, பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவந்த கார் ரேஸ் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக, தனது அணியினருடன் பங்குபெற்றார். இதில் பல வெற்றிகளையும் அஜித் பெற்றுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ஸ்பெயின் (Spain), பார்சிலோனாவில் நடைபெற்றுவந்த 24H கார் ரேஸ் போட்டிலும், நடிகர் அஜித் குமார் தனது அணியினருடன் கலந்துகொண்டார்.

இந்த போட்டியில் அஜித் குமாரின் அணி 3வது இடத்தை பெற்று இறுதிக்கட்ட போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் அஜித் குமார் மேடையில் இந்திய தேசியக்கொடியை பறக்கவிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : யாத்திசை பட இயக்குநரின் படத்தில் சசிகுமார்.. வெளியான அப்டேட்!

ஸ்பெயினில் வெற்றிபெற்ற அஜித்தின் அணி தொடர்பான வீடியோ பதிவு :

 

அஜித் குமாரின் கார் ரேஸ் வெற்றிகள் :

நடிக அஜித் குமார் இதுவரைக்கும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றிருந்த கார் ரேஸ் போட்டியில், இந்தியாவின் சார்பாக தனது அணியினருடன் கலந்துகொண்டார். அதில் இதுவே மொத்தம் 4 கோப்பைகளை வேற்றுள்ளார். துபாய், இத்தாலி, மற்றும் தற்போது ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடைபெற்றிருந்த கார் ரேஸ் போட்டிகளில் அஜித் வெற்றிபெற்றுளார்.

இதையும் படிங்க : கார்த்தியின் மார்ஷல் படத்தின் கதை இதுவா? வைரலாகும் தகவல்!

அவர் மூன்று 3வது மற்றும் ஒரு 2வது இடத்துக்கான பரிசு கோப்பையையும் இந்தியாவின் சார்பாக, வெளிநாடுகளில் நடைபெற்ற 24H கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு மற்றும் இந்திய நாட்டிற்கும் அஜித் பெருமை சேர்த்துள்ளார்.

அஜித் குடும்பத்துடன் இருக்கும் வைரலாகும் புகைப்பட பதிவு :

நடிகர் அஜித் குமார், இந்த கார் ரேஸ் போட்டியை முடித்த கையேடு வரும் 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய படத்தில் இணையவுள்ளார். இந்த படத்தை தற்போது ரசிகர்கள் AK64 என அழைத்துவருகின்றனர். இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.