Ajith Kumar: விசில் அடித்த ரசிகர்.. திடீரென மாறிய அஜித் குமாரின் முகம்.. வைரலாகும் வீடியோ!

Ajith Gets Angry With A Fan: சினிமாவில் பிரபல நாயகனாக இருந்து வருபவர் அஜித் குமார். இவர் தற்போது சினிமாவையும் கடந்து கார் ரேஸில் தீவிரமாக இருந்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் வைரலான வீடியோ ஒன்றில் அஜித் குமார், விசில் அடித்த ரசிகர் செய்யக் கூடாது என தடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Ajith Kumar:  விசில் அடித்த ரசிகர்.. திடீரென மாறிய அஜித் குமாரின் முகம்.. வைரலாகும் வீடியோ!

அஜித் குமார்

Published: 

14 Oct 2025 16:00 PM

 IST

நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good bad Ugly). இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்க, கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் அஜித் குமார் அதிரடி கேங்ஸ்டராக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இந்த பட சுமார் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட்’டாகியிருந்தது. அந்த வகையில், இந்த படத்தைத் தொடர்ந்து, தற்போது கார் ரேஸில் (Car race) தீவிரமாக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கும் மேலாக கார் ரேஸ் போட்டிகளில் கவனம் செலுத்திவருகிறார். இந்த போட்டிகளை தொடர்ந்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் தொடர்பாக அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் இணையத்தில் அஜித் குறித்த வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் அஜித்தின் முன்னே ரசிகர் ஒருவர் விசில் அடித்துள்ளார். அதற்கு அஜித் குமார் கொடுத்த ரியாக்ஷ்ன் வீடியோ வைரலாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: சூர்யா சார் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் – மமிதா பைஜூ

இணையத்தில் வைரலாகும் அஜித் குமார் வீடியோ

இந்த வீடியோவில் அஜித் குமாரிடம் ரசிகர் ஒருவர் கையை காட்டுகிறார், அதற்கு பதிலாக அஜித் குமாரும் கையை காட்டினார். இந்நிலையில் மற்றொரு ரசிகர் விசில் அடித்திருந்த நிலையில், கோபத்துடன் விசில் அடிக்க கூடாது என சைகை காட்டும் வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோவில் விசில் அடித்த ரசிகரை அஜித் குமார் முறைத்துப் பார்க்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில், வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் குமாரின் புதிய படம் :

குட் பேட் அக்லி படத்தை அடுத்ததாக அஜித் குமாரின் நடிப்பில் உருவாக்கவுள்ள திரைப்படம் AK64. இந்த படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கவுள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் நடிகர்கள் அஞ்சலி, ஸ்ரீலீலா, ஸ்வாசிகா என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடிக்கவுள்ளார்களாம்.

இதையும் படிங்க: எனது மறக்கமுடியாத தீபாவளி ரிலீஸ் படங்கள் அதுதான்- பிரதீப் ரங்கநாதன் பேச்சு!

இந்த படமானது கடத்தல் தொடர்பாக கதைக்களத்தில் தயாராகாவுள்ளதாம். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது பற்றி விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.