Ajith Kumar: ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடிக்கும் அஜித் குமார் – இணையத்தில் பரவிவரும் பதிவு!
Ajith Kumars New Ad: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் அஜித் குமார். இவர் நடிப்பையும் தொடர்ந்து கார் ரேஸ் போட்டிகளிலும் பங்குபெற்றுவருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் ரியல் எஸ்டேட் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளதாக கூறப்பட்டுவந்தது. இதையடுத்து இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

அஜித் குமார்
நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து மிக பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படமானது கடத்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், கிட்டத்தட்ட ரூ 230 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. இந்த படமானது அஜித் குமாருக்கு வரவேற்பை கொடுக்கவே, தனது அடுத்த படத்தையும் குட் பேட் அக்லி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Aadhik Ravichandran) இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது அஜித் குமாரின் 64வது படமாக தயாராகவுள்ளது. தற்போது கார் ரேஸ் (Car Race) பயிற்சியில் அஜித் குமார் பிசியாக இருந்துவரும் நிலையில், இந்த 2026 பிப்ரவரி இறுதியில் புது படத்தில் இணைவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்திற்கு முன் விளம்பரம் ஒன்றில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ளாராம். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது. நடிகர் அஜித் குமார் நோவா என்ற ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் (Nova Real Estate) நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாய் கிழவி பட இயக்குநருடன் சிவகார்த்திகேயன் இணையும் படம்.. ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது தெரியுமா?
அஜித் குமார் விளம்பரத்தில் நடித்தது குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:
@Akracingoffl next Advertisement 🙂 Nova Real Estate 😃#AjithKumarRacing #AK64 pic.twitter.com/cgvEntSl8v
— Sandy_MSD_ (@Sai_0205_) February 12, 2026
அஜித் குமார் நடித்த விளம்பரங்கள் என்னென்ன :
நடிகர் அஜித் குமார ஏற்கனவே தமிழில் விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர் சன் ரைஸ் காஃபி விளம்பரத்தில் நடித்திருந்தார். இதில் சிம்ரன் மற்றும் அஜித் குமார் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு முன் சிறுவயதில் மியாமி என்ற விளம்பரத்திலும் அஜித் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் டாடா நிறுவனத்தின் எனர்ஜி ட்ரிங் கம்பா விளம்பர போஸ்டர்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவந்தது.
இதையும் படிங்க: சார்பட்டா 2 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
மேலும் இந்த விளம்பரத்தின் போது, அஜித் குமாரின் மங்காத்தா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்த நிலையில், ரசிகர்கள் பலரும் கம்பா கூல்டிங்ஸை கொண்டு அபிஷேகம் செய்து கொண்டாடியிருந்தனர். அந்த அளவிற்கு அஜித் குமாரின் அந்த விளம்பரம் வரவேற்கப்பட்டிருந்தது. இதையடுத்தாக தற்போது நோவா ரியல் எஸ்டேட் விளம்பரத்திலும் நடித்துள்ளாராம். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.