Trisha : த்ரிஷாவிற்கு கதை சொன்னதே அஜித் சார்தான்.. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்!
Trisha Krishnans Character In Good Bad Ugly : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் முன்னணி இயக்கத்தில், தற்போது வெளியீட்டிற்குத் தயாராகியுள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆதிக் ரவிசந்திரன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் த்ரிஷா இப்படத்தில் நடித்தது மற்றும் அவரின் கதாபாத்திரம் குறித்துப் பேசியுள்ளார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் (Adhik Ravichandran) முன்னணி இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான படம் மார்க் ஆண்டனி (Mark Antony) . இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா மற்றும் விஷால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படமானது வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது. இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்துடன் (Ajith) குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் இணைந்தார். அஜித்தின் 63வது திரைப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) நிறுவனம் தயாரித்துள்ளது . மேலும் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் அஜித் குமார் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் என பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் த்ரிஷாவும் அஜித்திற்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சந்தித்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தில் த்ரிஷா எப்படி இணைந்தார் என்பதைப் பற்றிப் பேசியுள்ளார். இந்த படத்தின் கதையைக் கூட த்ரிஷாவிற்கு, நடிகர் அஜித்தான் கூறினார் என்றும் அவர் பேசியுள்ளார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசிய வீடியோ :
Dir #Adhikravichandran Recent
– How did #Trisha get into acting in this film…?
– I told this story over a phone call while filming #VidaaMuyarchi.
– Ajith sir had already told this story to Trisha Mam before I could tell him.
– #GoodBadUgly : Ramya
pic.twitter.com/1HpZYRYWiQ— Movie Tamil (@MovieTamil4) April 7, 2025
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன தகவல் :
குட் பேட் அக்லி படத்தின் ரிலிஸ் நெருங்கிவரும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் “நான் நடிகை த்ரிஷாவிடம், அவர் விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே, இப்படத்தைக் குறித்துப் பேசினேன்.
விடாமுயற்சி படத்திற்கு முன்னே நான் அவரை தேர்ந்தெடுத்தேன், அதன் பிறகுதான் அவர் மகிழ் திருமேனியின் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். அப்படி நடிகை த்ரிஷாவிடம் நான் போனில் பேசும்போது, அவரிடம் குட் பேட் அக்லி படத்தின் கதையை எடுத்துக் கூறவா என்று கேட்டேன். அதற்கு அவர் அஜித் சார் என்னிடம் படத்தின் கதையைத் தெளிவாகக் கூறிவிட்டார் மிகவும் அருமையாக உள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் அஜித் சார் படத்தில் ஹீரோயினுக்கு பெரிதாக முக்கியத்துவம் இருக்காது என்று கூறுவார்கள், ஆனால் இந்த குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா வெறும் கதாநாயகியாக மட்டுமில்லாமல், இப்படத்தின் முக்கிய அங்கமாகவும் இருக்கிறார். அவருடைய கதாபாத்திரமும் மிகவும் அருமையாக இருக்கும். இந்த படத்தில் அவரின் பங்களிப்பும் அதிகமாக இருக்கும் என்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெளிவாகக் கூறியுள்ளார்.