Samantha Ruth Prabhu : ‘நான் பார்த்த முதல் தமிழ் படமே அவருடையதுதான்’.. – நடிகை சமந்தா சொன்ன விஷயம்
Samantha Favorite Tamil Actor : தமிழ் சினிமா மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களைத் தனது கைவசம் வைத்திருப்பவர் சமந்தா ரூத் பிரபு. இவரின் முன்னணி நடிப்பில் பல படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. அந்த விதத்தில் இவருக்குப் பிடித்த முதல் தமிழ் நடிகர் யார் என்பதைப் பற்றி அவர் கூறியுள்ளார். அந்த நடிகர் யார் என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

டோலிவுட் சினிமா மூலம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி ஹிட் கொடுத்திருக்கிறது. மேலும் இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் குஷி (Kushi) இந்த படத்தில் சமந்தாவிற்கு ஜோடியாக நடிகர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) நடித்திருந்தார். கடந்த 2023ம் ஆண்டு வெளியான இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கியிருந்தார். இந்த படமானது ரொமேன்டிக் மற்றும் காதல் நிறைந்த படமாக வெளியாகியிருந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகை சமந்தா நோயினால் அவதிப்பட்டார். இதன் காரணமாக 1 வருடங்களுக்கும் மேலாக எதிலும் நடிக்கவில்லை. பல மாதங்களாக ஓய்வில்தான் இருந்தார்.
மேலும் இவரின் நடிப்பில் ஹன்னி பன்னி என்ற வெப் தொடர் 9இந்தியில் வெளியானது. இதை அடுத்ததாகத் தனது தயாரிப்பில் வெளியான சுபம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து நடிகை சமந்தா தெலுங்கில் மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த படமானது அறிவித்து 2 பல மாதங்களுக்கு மேலான நிலையில், தற்போது தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரீ கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முன்னதாக நடிகை சமந்தாவிடம், சினிமாவில் நுழைவதற்கு முன் உங்களுக்கு பிடித்தார் நடிகர் யார் என்பதைப் பற்றி அவர் பதில் அளித்துள்ளார். அந்த நடிகர் வேறு யாருமில்லை, நடிகர் சூர்யாதான் (Suriya).
நடிகை சமந்தா ரூத் பிரபுவின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நடிகை சமந்தா பேசிய விஷயம் :
அந்த நேர்காணலில் நடிகர் சமந்தாவிடம், தொகுப்பாளர் உங்களுக்கு சினிமாவில் நடிப்பதற்கு முன் பிடித்த தமிழ் நடிகர் யார் என்று கேட்டிருந்தார். அதற்கு நடிகை சமந்தா, “எனது வீட்டில் தமிழ்ப் படங்கள் பார்க்கமாட்டார்கள், எல்லாரும் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். நான் பார்த்த முதல் படமே சூர்யாவின் படம்தான். அவரின் காக்க காக்க படத்தைத்தான் நான் முதலில் பார்த்தேன்.
அதிலிருந்தே எனக்கு சூர்யாதான் மிகவும் பிடித்தது நடிகராகிவிட்டார். நான் சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிக்கும்போது, சாதாரணமாகக் கலைநிகழ்ச்சிகள் கலந்துகொள்ளமாட்டேன். அன்று லீவ் போட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுவேன். ஆனால் எனது கல்லூரியில் சிறப்பு விருந்தினராக ஒருமுறை சூர்யா வந்திருந்தார். அன்று அந்த நிகழ்ச்சியில் முதல் ரோவில் அமர்ந்து அமர்ந்து, சூர்யா.. சூர்யா என்றுதான் சத்தம் போட்டிருந்தேன். அன்று நான் சூர்யாவுடன் ஜோடியாகப் படங்களில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் எனது கனவு நிறைவேறியது என்று நடிகை சமந்தா கூறியிருந்தார்.