Samantha : கோவை ஈஷாவில் நடந்த சமந்தா திருமணம்.. இணையத்தில் பரவும் தகவல்!
Samantha Marries Raj Nidimoru: நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் ஃபேமிலி மேன் இணையதள தொடரின் இயக்குனர் ராஜ் நிதிமோரு இருவரும் ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் நெறுங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

சமந்தா மற்றும் ராஜ் நிதிமோரு
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வந்தவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவர் தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். அதன்படி தெலுங்கு சினிமாவில் நடிகர் நாக சைத்தன்யா உடன் இணைந்து நடித்த போது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மிகவும் பிரமாண்டமாக இவர்களின் திருமணம் நடைப்பெற்றது. காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்களின் திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து தனது நடிப்பு வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார் நடிகை சமந்தா ரூத் பிரபு. தீவிரமாக நடித்து வந்த நடிகை சமந்தா உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் நடிப்பதில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார்.
இவர் நடிப்பில் இருந்து விலகி இருந்த நேரத்தில் சமந்தாவும் முன்னதாக அவர் நடித்த இணையதள தொடரான ஃபேமினி மேன் தொடரின் இயக்குநர் ராஜ் உடன் காதலில் இருப்பதாக பல செய்திகள் இணையத்தில் பரவி வைரலாகி வந்தது. மேலும் பல பொது நிகழ்ச்சிகளில் இருவரும் இணைந்து பங்கேற்று வந்தனர். சமீபத்தில் நடிகை சமந்தா ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதில் ராஜும் இருப்பது வதந்திகளை உண்மையாக்குவது போல இருந்தது. தொடர்ந்து பல இடங்களில் ஒன்றாகக் காணப்பட்ட சமந்தா மற்றும் ராஜ் இருவரும் இன்று திருமணம் செய்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயக்குநரை திருமணம் செய்துகொண்ட சமந்தா:
சினிமாவில் பெரிய அளவில் நடிக்காமல் இருந்த நடிகை சமந்தா தற்போது சினிமா துறையிலேயே வெவ்வேறான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரின் புதுப் படம் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருந்தது. ஆன்மீகம் மற்றும் யோகாவில் தீவிர ஆர்வம் கொண்ட சமந்தா தொடர்ந்து கோயம்புத்தூரில் உள்ளா ஈஷா யோகா மையத்திற்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
Also read… தலைவர் 173-க்கு நோ… சுந்தர் சி இயக்கும் படத்தின் அப்டேட் இதோ
இந்த நிலையில் நீண்ட நாட்களாக சமூக வலைதளம் மற்றும் செய்திகளில் சமந்தாவின் காதலர் என்று கிசுகிசுக்கப்பட்ட பிரபல இயக்குநர் ராஜ் நிதிமோரை இன்று 1-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 30 பேர் மட்டுமே கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமந்தா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
Also read… மலையாள சினிமாவில் இந்த அபயந்தர குட்டவாளி படத்தை மிஸ் செய்யாதீர்கள்