தியேட்டரில் ரெட்ரோ படத்தை பார்த்த நடிகை பூஜா ஹெக்டே – யாருடன் தெரியுமா?
Actress Pooja Hegde: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகியுள்ள ரெட்ரோ படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ருக்மிணி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை சமீபத்தில் அவர் திரையரங்குகளில் பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகை பூஜா ஹெக்டே
தமிழில் 2012-ம் ஆண்டு இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான படம் முகமூடி. சூப்பர் ஹீரோ மையமாக வைத்து உருவான இந்தப் படத்தின் மூலம் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக அறிமுகம் ஆனார். நடிகர் ஜீவா (Jiiva) நாயகனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். இதில் நாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே தமிழில் இவர் பெரிய அளவில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு அமையவில்லை. இது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது என்று கூற வேண்டும். இந்தப் படத்திற்கு பிறகு தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் அதிக அளவில் நடிக்கத் தொடங்கினார் பூஜா ஹெக்டே. அதனை தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கத் தொடங்கினார். நடிகர் விஜய் நடிகர் விஜய் இந்தப் படத்தில் நாயகனாக நடித்தார்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா முதல் முறையாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் ரெட்ரோ படத்திற்காக இணைந்தார், இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தை தற்போது நடிகை பூஜா ஹெக்டே கிளாஸ்கோவில் நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் வருண் தவானுடன் பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் பூஜா ஹெக்டே வீடியோ:
Venukala Pooja kurchundi ani 2nd half motham kurchuna ra @karthiksubbaraj em torture ra second half na lawda lo back story appude d*ngeyalsindhi 🙏#Retro https://t.co/tla4Ltamuw
— Baba Yaga (@Baba_yagaaa9) May 1, 2025
சமீபத்திய வெளியான ரெட்ரோ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேசிய நடிகை பூஜா ஹெக்டே, ருக்மணி கதாப்பாத்திரம் இதுவரை தான் ஏற்று நடிக்காத ஒன்று என்று தெரிவித்துள்ளார். மேலும் ரெட்ரோ படத்தில் இருந்து ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட நடிகை பூஜா ஹெக்டே, ருக்கு என்றும் அழைக்கப்படும் ருக்மிணி என்ற கதாபாத்திரம் மிகவும் தூய்மையான ஆன்மா. அவள் ஒரு அப்பாவி ஆனால் புத்திசாலி என்று அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார்.
நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
ரெட்ரோ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஊட்டி, கேரளா மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இந்த படம் தனது மனைவிக்கு சபதம் செய்த பிறகு வன்முறையைத் தவிர்த்து அமைதியான வாழ்க்கையை வாழ முயற்சிக்கும் ஒரு நபரைப் பற்றியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.