16 ஆண்டுகளை நிறைவு செய்த யோகி படம்… நடிகர் யோகிபாபு வெளியிட்ட உருக்கமான பதிவு

16 Years Of Yogi Movie : தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் யோகி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகளைக் கடந்த நிலையில் நடிகர் யோகி பாபு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

16 ஆண்டுகளை நிறைவு செய்த யோகி படம்... நடிகர் யோகிபாபு வெளியிட்ட உருக்கமான பதிவு

யோகி பாபு

Published: 

27 Nov 2025 21:11 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 27-ம் தேதி நவம்பர் மாதம் 2009-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் யோகி. இந்தப் படத்தை இயக்குநர் சுப்ரமணியம் சிவா இயக்கி இருந்த நிலையில் அமீர் இந்தப் படத்திற்கு திரைக்கதையை எழுதி இருந்தார். மேலும் இந்தப் படத்தை அமீரின் டீம் ஒர்க் புரடெக்‌ஷன் கம்பெனி தயாரித்து இருந்தது. மேலும் இந்தப் படத்தில் நாயகனாகவும் அமீர் நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் மதுமிதா, சுவாதி, வின்சென்ட் அசோகன், சிநேகன், கஞ்சா கருப்பு, பாபு, பொன்வண்ணன், நந்தா பெரியசாமி, பெசன்ட் ரவி, தினகரன் நிருபர் தேவராஜ், கசாலி, வினோத், ஜிஜுபா என பலர் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் பாபுவாக அறிமுகம் ஆனவர்தான் யோகி பாபு. இந்தப் படத்திற்கு பிறகு இவரது சினிமா வாழ்க்கை மாறியது உண்மை.

அதன் காரணமாகவே இவரை அனைவரும் யோகி பாபு என்று தற்போதும் அழைத்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு பிறகு யோகி பாபு பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது காமெடி கதாப்பாத்திரங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் யோகி பாபு அவ்வபோது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

16 ஆண்டுகளைக் கடந்த யோகி படம் குறித்து நெகிழ்ந்து பேசிய யோகி பாபு:

இந்த நிலையில் தனது சினிமா வாழ்க்கைக்கு ஒரு அடையாளத்தை கொடுத்த யோகி படம் குறித்து நடிகர் யோகி பாபு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, திரு.அமீர் அண்ணன் நடிப்பில், திரு.சுப்ரமணியம் சிவா அண்ணன் அவர்கள் இயக்கத்தில் உருவான ” யோகி” திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆகின்றது அமீர் அண்ணன் மற்றும் சுப்ரமணியம் சிவா அண்ணன் இருவருக்கும் என்றும் கடமைப்பட்டு உள்ளேன். நான் வெற்றிகரமாக இயங்கி வர முக்கியமான வேர்களான இயக்குநர்கள் மற்றும் எனது தயாரிப்பாளர்கள் – திரைத் துறையில் அனைத்து பிரிவுகளிலும் பணி புரியும் நண்பர்கள். எனக்கு ஊக்கம் அளிக்கும் ஊடக நண்பர்கள் – எனது மகிழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி . உங்கள் கலைஞன் – நகைச்சுவை நடிகன் யோகி பாபு என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

Also Read… ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் சீரிஸ் ரசிகர்களால் முடங்கிய நெட்ஃபிளிக்ஸ்… என்ன நடந்தது?

யோகி பாபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய் சேதுபதி குறித்து புகழ்ந்து பேசிய நெல்சன் திலீப் குமார் – வைரலாகும் வீடியோ

திருமணம் குறித்து ஸ்மிருதி மந்தனா எடுத்த முக்கிய முடிவு
இந்திய அரசாங்கத்தின் CNAP அமைப்பு.. இதன் நோக்கம் என்ன?
குளிர் காலத்தில் அதிகளவில் டீ, காபி குடிப்பீர்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை!
லோன் வாங்கியோருக்கு குட்நியூஸ்.. ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!