கண்ணப்பா படத்தின் ஹார்ட் டிஸ்க் திருட்டு.. மஞ்சு மனோஜ் வேண்டுகோள்!
கண்ணப்பா படத்தின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனது குறித்து நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம் அளித்துள்ளார். படத்தின் போஸ்ட்-புரொடக்ஷன் பணிகளின் போது ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதாகவும், இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் படத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

கண்ணப்பா (Kannappa Movie) படத்தில் ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி அப்படத்தின் ஹீரோவான விஷ்ணு மஞ்சு (Vishnu Manchu) தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், “பொதுவாக ஒரு படம் முடித்து அது டிஜிட்டல் வடிவில் மாற்றிய பிறகு ஹாலிவுட்டில் 3 காப்பிகள் எடுப்பார்கள். ஆனால் இந்திய சினிமாவில் 2 காப்பிகள் எடுப்பார்கள். அதில் ஒன்று எடிட்டருக்கும், இன்னொன்று தயாரிப்பு நிறுவனத்திடமும் இருக்கும். கண்ணப்பா படம் எடிட் முடிந்து சிஜி துறைக்கு வந்தது. அந்த பணியானது இந்தியாவில் மட்டும் 8 கம்பெனிகளில் நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் 2 கம்பெனிகளிலும் விஎஃப்எக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. நாங்கள் இந்த விஷயத்தை முதலில் ஊடகத்தினரிடம் சொல்லவில்லை.
காவல் நிலையத்தில் புகாரளித்த பிறகு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. அதிலிருந்து 3,4 நாட்கள் கழித்து தான் காவல்துறை சம்பந்தப்பட்ட செய்தியை கவனிக்கும் நிருபருக்கு விஷயம் தெரிந்து இவ்வளவு பெரிதாக பரவியது. மேலும் பணிகள் எங்கு நடக்கிறதோ அங்கிருந்து கலர் லேப்பிற்கு அனுப்புவது வழக்கம். அப்படியாக மும்பையில் இருக்கும் அந்த கம்பெனியில் இருந்து முதலில் படக்காட்சிகள் வந்தது. அதில் கொஞ்சம் பிரச்னை இருந்தது.




ஹார்ட் டிஸ்கால் வந்த பிரச்னை
Actor Vishnu Manchu about the #Kannappa harddisk Missing:
“The accused mentioned in FIR , Raghu & Chaithra was working under My younger brother Manoj Manchu . There is no request from production team for the harddisk to send to the VFX team; but we don’t know why they sent .… pic.twitter.com/T5Kyt4aWZ8
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 30, 2025
அதை சரி செய்துவிட்டு இரண்டாவது முறை அனுப்பினார்கள். ஹார்ட் டிஸ்க் அனுப்பப்பட்ட நிலையில் அதை தயாரிப்பு தரப்பிலோ, போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடக்கும் கலர் லேப்பில் இருந்தோ கேட்கவில்லை. அவர்கள் அனுப்பி விட்டார்கள். அதை என்னுடைய அப்பா இருக்கும் வீட்டு முகவரிக்கு அனுப்பி இருக்கிறார்கள். சமீபகாலமாக குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் அனைவருக்கும் தெரியும். இப்படியான நிலையில் அங்கிருக்கும் ரகு என்பவர், சரிதா என்ற பெண்ணிடம் வழங்கியுள்ளார்.
இது நடந்து 4 வாரங்களான நிலையில், அவர்கள் 2 பேரும் என்னுடைய தம்பி மனோஜ் வீட்டில் வேலை செய்கிறார்கள். அவர் சொல்லி எடுத்துட்டு வந்தார்களா என தெரியவில்லை. முதலில் பேசிப் பார்த்தோம். இப்படியான நிலையில் சமூக வலைத்தளத்தில் “கண்ணப்பா படம் ஹார்ட் டிஸ்க்.. லீக்கானால் மஞ்சுக்கு என்ன பிரச்னை” என்ற கேப்ஷனோடு பதிவு ஒன்று வெளியானது. இதனை போலீஸில் சொன்னபோது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என சொல்ல முறைப்படி எல்லாம் செய்யப்பட்டது. மனோஜ் பெயர் வராமல் முயற்சித்தோம்,முடியவில்லை.
ஒருவேளை படம் இணையத்தில் வெளியானால், ஒன்றை கூறிக்கொள்கிறேன். கஷ்டப்பட்டு வேலை பார்த்திருக்கிறோம். தயவு செய்து அதனை ஆதரிக்காதீர்கள். ஜூன் 27 ஆம் தேதி படம் வெளியாகிறது. படம் பார்த்து ஆதரவு கொடுங்கள். இந்த ஹார்ட் டிஸ்கை வெளியில் கொடுக்காமல் இருந்தால் ரொம்ப சந்தோஷம் என விஷ்ணு மஞ்சு கூறியுள்ளார்.
கண்ணப்பா படம்
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் மோகன் பாபு தயாரிப்பில் தெலுங்கில் மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள படம் கண்ணப்பா. இந்து மதத்தில் மிகச்சிறந்த சிவ பக்தராக அறியப்படும் கண்ணப்பரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில் கண்ணப்பாவாக விஷ்ணு மஞ்சு நடித்துள்ளார். மேலும் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள கண்ணப்பா படத்தில் பிரபாஸ், மோகன்லால், அக்ஷய்குமார், சரத்குமார், கருணாஸ், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படமானது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.