Vijay Deverakonda : தமிழில் அவர் இயக்கத்தில் நடிக்கணும் – விஜய் தேவரகொண்டா!
Actor Vijay Deverakondas Wish : டோலிவுட் சினிமாவில் நம்பர் 1 இளம் நாயகனாக வலம்வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரின் நடிப்பில் கிங்டம் படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்து ரிலீசிற்குத் தயாராகிவரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர் தமிழ் பிரபல நடிகர் ஒருவரின் இயக்கத்தில் படத்தில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார். அந்த நடிகர் யார் என்று பார்க்கலாம்.

தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல் பான் இந்தியா முழுவதும் ரசிகர்களின் இளம் நாயகனாகக் கலக்கி வருபவர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) . ஆரம்பத்தில் காமெடி படங்களில் நடித்து வந்த இவருக்கு, பான் இந்தியா முழுவதும் பிரபலத்தைக் கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி (Arjun Reddy). இந்த படத்தை இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலமாக நடிகர் விஜய் தேவரகொண்டா அதிரடி ஆக்ஷ்ன் நாயகனாக சினிமாவில் பிரபலமானார். இதைத் தொடர்ந்து கீதா கோவிந்தம் போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருந்தார். மேலும் இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் பேமிலி ஸ்டார். இந்த படமானது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து கல்கி 2829ஏடி என்ற படத்தில் கேமியோ ரோலில் அர்ஜுனனாக நடித்திருந்தார்.
இந்த படத்தைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் கிங்டம் (Kingdom). இந்த படத்தை இயக்குனர் கௌதம் தின்னனுரி (Gowtam Tinnanuri) இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டா, நடிகர் தனுஷின் இயக்கத்தில் திரைப்படத்தில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார். இந்த தகவலானது தனுஷ் (Dhanush) ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒருவேளை இவர்கள் இருவரின் கூட்டணியில் படம் உருவானால் நன்றாக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர். தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எக்ஸ் பதிவு :
#Kingdom
July 04, 2025.Will see you in the cinemas 🙂 pic.twitter.com/uQUjpngygD
— Vijay Deverakonda (@TheDeverakonda) May 14, 2025
நடிகர் விஜய் தேவரைகோண்டாவின் கிங்டம் படமானது முதலில் வரும் 2025, மே 30ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் படக்குழு ரிலீஸை ஒத்திவைத்துள்ளது. நடிகர் விஜய் தேவரைகோண்டாவின் இந்த படமானது வரும் 2025, ஜூலை 4ம் தேதியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது . தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தனுஷின் திரைப்படங்கள் :
நடிகர் தனுஷின் இயக்கத்தில் இட்லி கடை படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளது. மேலும் இந்த படம் வரும் 2025, அக்டோபர் 1ம் தேதியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீசிற்கு முன் , தனுஷ் தெலுங்கில் நடித்துள்ள குபேரா படமானது வெளியாகவுள்ளது.
இது வரும் 2026, ஜூன் 20ம் தேதியில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படங்களைத் தொடர்ந்து தனுஷ் இந்தியில் தேரே இஷ்க் மெயின் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் டி55, டி56 மற்றும் விக்னேஷ் ராஜாவுடன் புதிய படம் என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.