Retro Vs Hit 3 : நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ.. எதிர்பார்த்த கம்பேக் கொடுத்த சூர்யா!

Retro Vs Hit 3 Collection Comparison : கோலிவுட் சினிமா மற்றும் டோலிவுட் சினிமாவின் மோதலாகக் கடந்த 2025, மே 1ம் தேதியில் வெளியாகிய திரைப்படங்கள் ரெட்ரோ மற்றும் ஹிட் 3. இந்த இருபடங்களிலும் முன்னணி நடிகர்கள் சூர்யா மற்றும் நானி நடித்திருந்தனர். தமிழில் சூர்யாவின் ரெட்ரோ எந்த அளவிற்கு எதிர்பார்க்கப்பட்டதோ அதுபோல் தெலுங்கில் நானியின் ஹிட் 3 படமானது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நானியின் ஹிட் 3 படத்தின் வசூலை முறியடித்து சூர்யாவின் ரெட்ரோ சாதனை படைத்துள்ளது.

Retro Vs Hit 3 : நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ.. எதிர்பார்த்த கம்பேக் கொடுத்த சூர்யா!

ரெட்ரோ மற்றும் ஹிட் 3

Published: 

02 May 2025 19:55 PM

நடிகர் சூர்யாவின் (Suriya) முன்னணி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் படம் ரெட்ரோ (Retro) . இந்த படத்தை கோலிவுட்டின் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj) இயக்கியிருந்தார். சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருந்தனர். சூர்யாவின் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இவர்கள் இருவரின் ஜோடி மிகவும் அருமையாக அமைந்துள்ளது. இவர்களின் கூட்டணியில் உருவாகிய படத்துடன் போட்டியிட்ட தெலுங்கு திரைப்படம் ஹிட் 3 (HIT 3). இந்த படத்தில் பிரபல முன்னணி ஹீரோவான நானி (Nani) நடித்திருந்தார். இந்த படமானது முழுக்க ஆக்ஷ்ன் மற்றும் வன்முறை காட்சிகளுடன் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. மேலும் இதை தெலுங்கு இயக்குநர் சைலேஷ் கொளனு இயக்கியிருந்தார். சூர்யாவின் ரெட்ரோ படமும் சரி, நானியின் ஹிட் 3 படமும் சரி கடந்த 2025, மே 1ம் தேதியில் சிறப்பாக வெளியானது.

இந்த இரு திரைப்படங்களும் சரி தமிழகத்தில் காலை 9 மணி காட்சிகளுடன் சிறப்பாக ரிலீசாகியது. சூர்யா மற்றும் நானியின் படங்களுக்கும் இடையே பயங்கரமான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல இந்த படங்களின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதில் நானியின் ஹிட் படமானது முதல் நாள் உலகளாவிய வசூலில் சுமார் ரூ. 43 கோடிகளை வசூல் செய்திருந்த நிலையில், சூர்யாவின் ரெட்ரோ அந்த சாதனையை முறியடித்து உலகளாவிய வசூலி சுமார் ரூ. 46 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நானியின் ஹிட் 3 படத்தைவிட ரூ. 3 கோடிகளை அதிகம் வசூல் செய்து சூர்யாவின் ரெட்ரோ படமானது முன்னிலை வகிக்கிறது.

ரெட்ரோ படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :

சூர்யாவின் இந்த ரெட்ரோ படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சிறப்பாக இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பின்னணி இசையும் சரி, பாடல்களும் சரி ரசிகர்களைக் கவரும் விதத்தில் மிகவும் அருமையாக இருந்தது. சூர்யாவின்  ஆக்ஷ்ன் படமாக இந்த ரெட்ரோ படம் இருந்தது என்று கூறலாம். சூர்யாவின் நடிப்பைத் தொடர்ந்து நடிகர்கள் ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ் போன்ற பிரபலங்களின் நடிப்பும் மிகவும் அருமையாக இருந்தது என்று கூறலாம். இந்த படமானது வார விடுமுறையை ஒட்டி இன்னும் அதிகம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

நடிகர் நானி வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நானியின் ஹிட் 3 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். இந்த படமானது ஒரு கொலை வழக்கை அடிப்படையாக வைத்துக் கதை நகர்கிறது. இந்த கதையில் அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் நடிகர் நானியின் ஆக்ஷ்ன் அதிகம் நிறைந்த படமாக இந்த ஹிட் 3 படமானது அமைந்துள்ளது. மேலும் இந்த படமானது உலகளாவிய வசூலில் முதல் நாளில் சுமார் ரூ 43 கோடிகளை வசூல் செய்துள்ளது. ஆனால் சூர்யாவின் ரெட்ரோ உலகளாவிய வசூலில் ரூ. 46 கோடிகளை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.