Suriya : ‘ரோலக்ஸ்’ ரோலில் நடிப்பதற்குக் காரணமாக இருந்தது அந்த வெறிதான்.. நடிகர் சூர்யா உடைத்த உண்மை!
Suriya Talks About Rolex Role : கோலிவுட் சினிமாவில் ரசனை மிகுந்த நாயகனாக இருந்து வருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் இதுவரைக்கும் பல படங்கள் வெளியாகியிருந்தாலும், அவர் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்ததற்குக் காரணம் பற்றி சூர்யா கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) படங்கள் என்றாலே அதற்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். நடிகர் விஜய் முதல் ரஜினிகாந்த் (Vijay to Rajinikanth) போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். மாநகரம் (Maanagaram) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தை அடுத்தாக நடிகர் விஜய்யின் நடிப்பில் மட்டும் 3 படங்களை இயக்கியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) கதாநாயகனாக நடித்திருந்த படம் விக்ரம் (Vikram). கடந்த 2022ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் எதிர்பாராத பல கதாபாத்திரங்கள் இணைந்து அருமையாக வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா (Suriya) ரோலெக்ஸ் என்ற மிரட்டலான வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் சில நிமிடங்கள் காட்சியில் அவர் வந்திருந்தாலும், அவர் நடித்திருந்த ரோலக்ஸ் கதாபாத்திரமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் நடிகர் சூர்யா சமீபத்தில் ரெட்ரோ பட நேர்காணலில் கலந்துகொண்ட நிலையில், விக்ரம் படத்தில் ரோலக்ஸ் (Rolex) கதாபாத்திரத்தில் நடித்ததை பற்றி பேசியிருக்கிறார். அவர் அந்த நேர்காணலில் நான் மக்கள் எதிர்பார்க்காத கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்றுதான் ரோலக்ஸ் ரோலில் நடித்தேன் என்று கூறியிருக்கிறார். மேலும் இதைப் பற்றி சூர்யா கூறியதை விளக்கமாகப் பார்க்கலாம்.
ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து சூர்யா உடைத்த உண்மை :
ரெட்ரோ படத்தினை தொடர்ந்து நேர்காணலில் பேசிய சூர்யாவுடன், ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் சூர்யா “சூர்யா என்றால் இந்த மாதிரியான படங்களில் மட்டும்தான் நடிப்பார் என்று, மக்கள் என்னைப் பற்றி யூகிக்கக்கூடியவராக இருக்கவிரும்பவில்லை. பலரும் சூர்யா என்றால் இந்த படங்களில் மட்டும்தான் நடிப்பார் என்று எதிர்பார்ப்பார்கள். நான் அந்த மாதிரியான விமர்சனங்களுக்கு ஆளாக விரும்பவில்லை. நான் மக்களிடம் இருந்து அந்த விமர்சனங்களை, அவர்கள் எதிர்பார்ப்பை தகர்க்க நினைத்தேன். அதன் காரணமாக தன ஒரு முயற்சியாக லோகேஷின் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அது அனைவருக்குமே எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது என நடிகர் சூர்யா ஓபனாக பேசியிருந்தார்.
ரெட்ரோ திரைப்படம் :
A celebration that’s gonna give a band satham pola vibe inside you 😍
Here’s a peek into the #Kanimaa Alternate – a small part of the single shotBook your tickets for #Retro here
🔗 https://t.co/zLoKNZJF7N #KanimaaAlt #RetroRunningSuccessfully 🔥 #LoveLaughterWar… pic.twitter.com/hUgSroRuek— 2D Entertainment (@2D_ENTPVTLTD) May 4, 2025
நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ரெட்ரோ. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படமானது சூர்யாவின் அதிரடி காதல் மற்றும் ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் அமைந்திருந்தது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இவர் தமிழில் ஜீவா மற்றும் விஜய்யை தொடர்ந்து சூர்யாவுடனும் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.