Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குடும்ப செண்டிமெண்டை மையமாக கொண்டு வெளியானது சூரியின் மாமன் பட ட்ரெய்லர்!

Maaman - Official Trailer | நடிகர் சூரியின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மாமன் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தின் டைட்டில் வெளியான போதே ரசிகர்கள் இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதற்கான கணிப்புகளையும் தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் ட்ரெய்லரில் இது ஒரு ஃபேமிலி செண்டிமெண்ட் என்று தெரியவந்துள்ளது.

குடும்ப செண்டிமெண்டை மையமாக கொண்டு வெளியானது சூரியின் மாமன் பட ட்ரெய்லர்!
சூரிImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 01 May 2025 16:15 PM

நடிகர் சூரி தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகம் ஆகி கொடிக்கட்டி பறந்தார். தொடந்து தமிழில் முன்னணி நடிகர்கள் பலரது படங்களில் சூரி நிச்சயம் இருக்க வேண்டும் அவரது காமெடி படத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணினர். தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, ரஜினி, சிவகார்த்திகேயன் என பல முண்ணனி நடிகர்களின் படங்களில் காமெடியனாக கலக்கி வந்தார் நடிகர் சூரி. இதில் சூரி மற்றும் சிவகார்த்திகேயனின் காம்போ ரசிகர்களால் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து சினிமாவில் காமெடியனாக இருந்த நடிகர் சூரி நாயகனாக அறிமுகம் ஆன விடுதலைப் படத்தில். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார்.

விடுதலை படத்தை தொடர்ந்து கருடன், கொட்டுக்காளி, விடுதலை பாகம் இரண்டு என தொடர்ந்து நாயகனாக நடித்த சூரி தற்போது மாமன் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.  இந்தப் படத்தில் நடிகர் சூரிக்கு நாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகை ஸ்வாசிகா சூரியின் அக்காவாக நடித்துள்ளார்.

தாய் மாமன் பாசத்தை மையமாக வைத்து ஃபேமிலி செண்டிமெண்டாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லரை சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்:

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நகைச்சுவை மற்றும் உணர்ச்சியை கலந்து, வலுவான ஃபேமிலி கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் ஒரு புதிய மற்றும் உறவுகளின் வலிமையை உணர்த்தும் பாத்திரத்தில் நடிகர் சூரி தோன்றுகிறார். தாய் மாமன் மற்றும் மருமகனுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டம் தான் இந்தப் படம்.

ட்ரெய்லர் தொடக்கத்திலேயே தனது அக்காவிற்கு பிறக்க உள்ள குழந்தை மீது தான் எவ்வளவு உரிமையுள்ளவன் என்பதை சூரி காட்டுகிறார். அந்த குழந்தை பிறந்ததில் இருந்து வளரும் வரை தனக்கு உள்ள உரிமையும் கடமையையும் இந்த ட்ரெய்லர் மூலம் காட்டுகிறது. எந்த சூழலிலும் தனது உரிமையை விட்டுக்கொடுக்காத மாமனாக நடிகர் சூரி இந்தப் படத்தில் நடித்துள்ளது ட்ரெய்லர் மூலம் தெரிகிறது.

இளைஞருக்கு குளிரை சூடாகவும், சூடானவை குளிராகவும் உணரும் நோய்!
இளைஞருக்கு குளிரை சூடாகவும், சூடானவை குளிராகவும் உணரும் நோய்!...
பனீர் டிக்கா மசாலா சாப்பிட ஆசையா..? எளிதாக இப்படி செய்து பாருங்க!
பனீர் டிக்கா மசாலா சாப்பிட ஆசையா..? எளிதாக இப்படி செய்து பாருங்க!...
தியேட்டரில் புகைபிடிக்கும் எச்சரிக்கைகள் மனநிலையைக் கொல்லும்
தியேட்டரில் புகைபிடிக்கும் எச்சரிக்கைகள் மனநிலையைக் கொல்லும்...
யாருடன் கூட்டணி ? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?
யாருடன் கூட்டணி ? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?...
விஜய்யின் பேச்சை கேட்காத ரசிகர்கள் - சேதமடைந்த வாகனம் !
விஜய்யின் பேச்சை கேட்காத ரசிகர்கள் - சேதமடைந்த வாகனம் !...
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகி இவரா?
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகி இவரா?...
ஏப்ரல் 2025ல் அதிகபட்சமாக ரூ. 2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!
ஏப்ரல் 2025ல் அதிகபட்சமாக ரூ. 2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!...
மன அமைதியே முக்கியம்.. Waves மாநாட்டில் அல்லு அர்ஜூன் ஓபன் டாக்!
மன அமைதியே முக்கியம்.. Waves மாநாட்டில் அல்லு அர்ஜூன் ஓபன் டாக்!...
இணையத்தில் கவனம் பெறும் நடிகர் அஜித் குமாரின் பேட்டி
இணையத்தில் கவனம் பெறும் நடிகர் அஜித் குமாரின் பேட்டி...
கமல் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - ஓபனாக பேசிய சிரஞ்சீவி
கமல் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - ஓபனாக பேசிய சிரஞ்சீவி...
ஹிட் 3 படத்தின் வெற்றி... நானி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!
ஹிட் 3 படத்தின் வெற்றி... நானி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!...