சிம்புவிற்காக சந்தானம் பன்ன மாதிரி சிவகார்த்திகேயனுக்காக நீங்க அத பன்னுவீங்களா? – நடிகர் சூரி பதில்

Actor Soori: நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு காமெடி கதாப்பாத்திரத்தில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பல நடிகர்களும் அவர் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறிவந்த நிலையில் நடிகர் சிம்புவிற்காக அவரது படத்தில் காமெடி ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சிம்புவிற்காக சந்தானம் பன்ன மாதிரி சிவகார்த்திகேயனுக்காக நீங்க அத பன்னுவீங்களா? - நடிகர் சூரி பதில்

நடிகர்கள் சூரி மற்றும் சிவகார்த்திகேயன்

Published: 

21 May 2025 20:10 PM

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள காலக்கட்டத்தில் காமெடி நடிகராக உள்ளவர்கள் நாயகன்களாக மாறி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வருகின்றனர். இதில் ஒரு பெஞ்ச் மார்க்கை செட் செய்தவர் நடிகர் சந்தானம் (Actor Santhanam) என்று சொல்லாம். காமெடியனாக அறிமுகம் ஆகி பின்பு கதாநாயகனாக தன்னை உச்சத்தில் கொண்டு நிலை நிறுத்தினார். இவரைத் தொடர்ந்து நடிகர்கள் யோகி பாபு மற்றும் சூரி ஆகியோரும் தொடர்ந்து நாயகன்களாக நடித்து வருகின்றன. இதில் நடிகர் யோகி பாபு மட்டும் அவ்வப்போது நாயகனாகவும், காமெடியனாகவும் மாறிமாறி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சந்தானம் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு காமெடி கதாப்பாத்திரத்தில் நடிப்பதை தவிர்தார். அவர் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என்று நடிகர்கள் ஜீவா, ஆர்யா, சிம்பு என பலரும் கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் சிம்புவின் கோரிக்கைக்கு இணங்க நடிகர் சந்தானம் அவரது படத்தில் காமெடியனாக நடிக்க ஒப்புக்கொண்டார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சந்தானம் இந்த முடிவிற்கு வர காரணம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வர சிம்புதான் வாய்ப்பு கொடுத்தார். இதுகுறித்து பல பேட்டிகளில் நடிகர் சந்தானம் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூரி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது சந்தானம் சிம்பு படத்தில் காமெடி நடிகராக நடிப்பது போல நீங்களும் நடிகர் சிவகார்த்திகேயன் கூப்பிட்டா காமெடி நடிகராக மீண்டும் நடிப்பீங்களா என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

நடிகர் சூரி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

இதற்கு பதிலளித்துப்பேசிய நடிகர் சூரி தம்பி சிவகார்த்திகேயன் என்கிட்ட அப்படி கேட்க மாட்டார். ஏன்னா அவர் ஏற்கனவே என்கிட்ட சொன்னது என்னன்னா நாம ரெண்டு பேரும் இனி ஒன்னா நடிக்கப் போகிறோம் என்றால் அந்த கதையில் நாம் இருவருக்கும் சரிசமமான இடம் இருக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் சொன்னதாக நடிகர் சூரி கூறியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமீபத்தில் நடிகர் சூரி நாயகனாக நடித்து வெளியான படம் மாமன். குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகர் சூரி திரைக்கதை ஆசிரியராகவும் அறிமுகம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.