விமல் நடிப்பில் உருவாகும் மகாசேனா படம் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூரி

Mahasenha Movie: தமிழ் சினிமாவில் பல காமெடி ஜானர் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் விமல். இவரது நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி தற்போது விமல் நடிப்பில் உருவாகியுள்ள மகாசேனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விமல் நடிப்பில் உருவாகும் மகாசேனா படம் - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூரி

மகாசேனா

Published: 

11 Oct 2025 19:28 PM

 IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் பலப் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார் நடிகர் விமல் (Actor Vemal). அதன்படி நடிகர்கள் விஜய், அஜித், ஜீவா என பலர் படங்களில் பெயரிடப்படாதப் படங்களில் நடித்துள்ளார் நடிகர் விமல். அதனைத் தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து பலப் படங்களில் நடிகர் விமல் நாயகனாக நடித்து வருகிறார். அதன்படி நடிகர் விமர் நாயகனாக நடித்து வெளியான களவாணி, தூங்கா நகரம், கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, மஞ்சப் பை, மாப்ள சிங்கம், மன்னர் வகையரா, களவாணி 2, தெய்வ மச்சான், பரமசிவன் பாத்திமா என தொடர்ந்து படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சினிமா வாழ்க்கையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர் தோல்வி காரணமாக நடிகர் விமல் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாமல் இருந்த நிலையில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான விலங்கு என்ற இணையதள தொடர் இவருக்கு மீண்டும் ஒரு வெற்றிப் பாதையை உருவாக்கியது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு ஜீ 5 ஓடிடியில் க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியான இந்த விலங்கு என்ற இணையதள தொடர் விமலின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. மேலும் இந்த தொடரில் விமலின் நடிப்பை ரசிகர்கள் அதிகம் பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விமல் நடிப்பில் மகாசேனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது:

விலங்கு  தொடருக்கு பிறகு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் பெற்று வருகிறார் நடிகர் விமல். அதன்படி நடிகர் விமல் தற்போது நடித்துள்ள படம் மகாசேனா. இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபுவும் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று நடிகர் சூரி வெளியிட்டுள்ளார். இந்தப் போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் துருவ் விக்ரம் – வைரலாகும் வீடியோ

நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பர்த்டே பாய் நிவின் பாலியின் ஓம் சாந்தி ஓஷானா படத்தை பார்த்து இருக்கீங்களா? அப்போ மிஸ் செய்யாமல் பாருங்க