குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் – வைரலாகும் போட்டோஸ்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 25-வது படத்திற்காக கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் சிவகார்த்திகேயனின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் - வைரலாகும் போட்டோஸ்

குடும்பத்தினருடன் நடிகர் சிவகார்த்திகேயன்

Published: 

30 Apr 2025 21:29 PM

சின்னத்திரையில் ஆங்கராக அறிமுகம் ஆகி பின்பு வெள்ளித்திரையில் காமெடியனாக அறிமுகம் ஆனார் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). தனுஷ் படங்களில் காமெடி நடிகராக வந்த இவர் அடுத்து தனுஷி தயாரிப்பில் நாயகனாக ஜொலிக்கத் தொடங்கினார். தொடர்ந்து காமெடி ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து இவரது நடிப்பில் வெளியான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இவர் நடிகர் சூரி (Soori) உடன் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த காம்போவை தமிழ் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது ஆக்‌ஷன் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் அமரன். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி 2024-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். மேலும் நடிகை சாய் பலல்வி இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் புரடெக்‌ஷன் தயாரித்து இருந்தது. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.

படம் வெளியாவதற்கு முன்பாக இந்தப் படம் ராணுவ வீரரின் கதை என்பதால் அதிகமாக ஆக்‌ஷன் தான் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் முற்றிலும் மாறுபட்ட கதையாக ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனுக்கும் அவரது காதல் மனைவிக்கும் இடையே உள்ள காதலை மையமாக வைத்து இந்தப் படம் முழுக்க முழுக்க உருவாகி இருந்தது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கூட்டணி வைத்தார்.

இணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் புகைப்படங்கள்:

இந்தப் படத்திற்கு மதராஸி என்று பெயர் வைத்துள்ளனர். படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.

இதில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன், அதர்வா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படம் இந்தி எதிர்ப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பரவி வருகின்றது.