எக்ஸ் தளத்தில் ரஜினியின் பாடலுடன் அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன சிவகார்திகேயன்!

Actor Sivakarthikeyan: கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் தாயார் இன்று அவரது 70-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினிகாந்தின் பாடலுடன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எக்ஸ் தளத்தில் ரஜினியின் பாடலுடன் அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன சிவகார்திகேயன்!

அம்மாவுடன் நடிகர் சிவகார்திகேயன்

Published: 

08 May 2025 19:43 PM

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan). தொலைக்காட்சியில் ஆங்கராக தனது பணியை தொடர்ந்த சிவகார்த்திகேயன் தனது விடாமுயற்சியால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். நடிகராக தொடங்கிய காலகட்டத்தில் தொடர்ந்து நகைச்சுவையை மையமாக வைத்து வெளியான படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். அதன் பிறகு அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட், தங்கை செண்டிமெண்ட் போன்ற படங்களிலும் கவனம் செலுத்து வந்தார். தொடர்ந்து காமெடி செண்டிமெண்டை மையமாக வைத்து பல படங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். தற்போது சமீபத்தில் வெளியாகும் படங்களில் ஆக்‌ஷனை அதிகமாக கொண்டுள்ள படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். படத்திற்கா உடல் எடையை அதிகரித்து ஜிம் பாடியுடன் ரசிகர்களுக்கு காட்சி அளிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இறுதியாக தமிழில் இவரது நடிப்பில் வெளியான படம் அமரன். இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 31-ம் தேதி அக்டோபர் மாதம் 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்திருந்தார்.

அமரன் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த நிலையில் படத்தை நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் தயாரித்தது. படம் திரையரங்குகளில் வெளியானபோது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்திற்கு மதராஸி என்று பெயர் வைத்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் சல்மான் கான் உடன் சிக்கந்தர் படத்தில் பிசியாக இருந்ததால் இந்தப் படத்தின் பணிகள் சற்று மந்தமாகவே நடந்து வந்தது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அதில் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 25-வது படத்திற்காக இயக்குநர் சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்துள்ளார். பராசக்தி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன் மற்றும் அதர்வா இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இந்த நிலையில் இன்று மே மாதம் 8-ம் தேதி 2025-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவரது அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ”அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே அதை நீயே தருவாயே அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே Happy 70th birthday Amma” என்று தெரிவித்திருந்தார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.