இயக்குநர் சங்கரின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது – நடிகர் சரத்குமார் ஓபன் டாக்!

Actor Sarathkumar talks about Gentleman Movie: தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். தொடர்ந்து பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குநர் சங்கரின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது - நடிகர் சரத்குமார் ஓபன் டாக்!

நடிகர் சரத்குமார்

Published: 

05 Mar 2026 17:37 PM

 IST

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகம் ஆகி பலப் படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டி வந்த நடிகர் சரத்குமார் பின்பு நாயகனாகவும் பலப் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து இவர் நாயகனாக நடித்து வந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் பல்வேறு கதாபபத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் கதையின் நாயகனகா நடித்து திரையரங்குகளில் வெளியான படம் ஆழி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக கவனத்தை ஈர்த்து வருகின்றது. தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் சரத்குமார் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் அளித்தப் பேட்டியில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஜென்டில்மேன் படத்தில் முதலில் தான்தான் நடிக்க இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி இயக்குநர் சங்கர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனப் படம் ஜென்டில்மேன். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் ஹீஸ்ட் ஆக்‌ஷன் படமாக வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் சரத்குமார் ஜென்டில்மேன் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சங்கரின் ஜென்டில்மேன் படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது:

சங்கர் சார் முதலில் ஜென்டில்மேன் படத்திற்காக என்னை தான் அணுகினார். ஐந்து நாட்கள் படப்பிடிப்பும் போட்டோஷூட்டும் முடித்தேன். பின்னர், தயாரிப்பாளர் குஞ்சுமோகனுக்கும் தயாரிப்பாளர் பவித்ரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, நான் அந்த படத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது, அது எனக்கு ஒரு பெரிய மிஸ் என்று சரத்குமார் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… தல இங்க! முண்டம் எங்க? விஜய் சேதுபதியின் காட்டான் படத்திலிருந்து வெளியானது நியூ போஸ்டர்

இணையத்தில் கவனம் பெறும் சரத்குமார் பேச்சு:

Also Read… தெறிக்கும் வெற்றி… திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது தலைவர் தம்பி தலைமையில் படம்

Follow Us
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி