நஸ்லேனின் ஆலப்புழா ஜிம்கானா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
Alappuzha Gymkhana: மலையாளத்தில் வெளியாகி பிரபலமான பிரேமலு படத்தின் மூலம் தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் நஸ்லேன். இவரது நடிப்பில் சமீபத்தில் ஆலப்புழா ஜிம்கானா என்ற படம் வெளியானது. இந்தப் படத்தில் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வைரலாகி வருகின்றது.

ஆலப்புழா ஜிம்கானா
நடிகர் நஸ்லேன் (Actor Naslen) நடிப்பில் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஆலப்புழா ஜிம்கான. இந்தப் படத்தை இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கி இருந்தார். இந்தப் படத்டில் நடிகர் நஸ்லேன் உடன் இணைந்து நடிகர்கள் லுக்மான் அவரன், கணபதி எஸ். பொதுவால், சந்தீப் பிரதீப், அனகா ரவி, பிராங்கோ பிரான்சிஸ், பேபி ஜீன் மற்றும் சிவ ஹரிஹரன் என பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான போது தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படம் போல இருக்கும் என்று விமர்சனம் எழுந்தது. ஆனால் இது எதற்கும் படக்குழு பதிலளிக்கவில்லை. ஆனால் படம் வெளியான போது இந்தப் படம் மான் கராத்தே படம் மாதிரி இல்லை என்றும் விமர்சனம் வந்தாது.
ஆலப்புழா ஜிம்கானா படத்தின் கதை என்ன?
12-ம் வகுப்பில் பெயிலான நண்பர்கள் கூட்டம் கல்லூரியில் எப்படி சேர்வது என்று கூட்டமாக யோசிக்கிறார்கள். அப்போது ஸ்போர்ஸ்ட் கோட்டாவில் கல்லூரியில் சேர முடிவு செய்கிறார்கள். ஆனால் என்ன விளையாட்டை தேர்வு செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது நஸ்லேனின் நண்பன் ஒருவரை காதல் பிரச்னையில் ஒருவர் அடித்து விடுகிறார்.
நடிகர் நஸ்லேனின் இன்ஸ்ட பதிவு:
அவரை அடிப்பதற்காக நண்பர்கள் அனைவரும் கூட்டமாக செல்கிறார்கள். அப்போது அந்த நபருக்கு பாக்ஸிங் தெரிந்ததால் அவர் இவர்களை திருப்பி அடித்து விடுகிறார். அதனைத் தொடர்ந்து இவர்கள் பாக்ஸிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் கல்லூரியில் சேரவும் முடிவு செய்கிறார்கள். இதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.
ஓடிடியில் வெளியாகும் ஆலப்புழா ஜிம்கானா:
இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது உள்ள இளைஞர்களின் காதலை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ஆக்ஷன், காமெடி என அனைத்தும் இந்தப் படத்தில் ரசிகர்களால் பாராட்டைப் பெற்றது.
நாயகனாக நஸ்லேன் நடித்து இருந்தாலும் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் சரிசமமான ஸ்கிரீன் ஸ்பேஸ் இருந்தது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அனைத்து நடிகர்களும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ஜூன் மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.