லவ்லி படத்திற்கும் ஈகா படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை – நடிகர் மேத்யூ தாமஸ்

Actor Mathew Thomas: மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருபவர் நடிகர் மேத்யூ தாமஸ். இவர் தமிழில் நடிகர் விஜயின் லியோ படத்தில் அவரது மகனாக நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றார். இந்த நிலையில் மலையாளத்தில் தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள லவ்லி படத்திற்கும் ஈகா படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

லவ்லி படத்திற்கும் ஈகா படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - நடிகர் மேத்யூ தாமஸ்

மேத்யூ தாமஸ்

Updated On: 

14 May 2025 11:25 AM

மலையாள சினிமாவில் 2019-ம் ஆண்டு இயக்குநர் மது சி நாராயணன் இயக்கத்தில் வெளியான படம் கும்பளங்கி நைட்ஸ். 4 அண்ணன் தம்பிகளை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நான்காவது உள்ள தமிபியாக நடிகர் மேத்யூ தாமஸ் (Actor Mathew Thomas) நடித்திருந்தார். இதுதான் சினிமாவில் இவர் நடிகராக அறிமுகம் ஆன முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, ஃபகத் பாசில், அன்னா பென் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அதே ஆண்டு நடிகர் மேத்யூ தாமஸ் நடிப்பில் வெளியான படம் தண்ணீர் மதன் தினங்கள். இந்தப் படத்தில் பள்ளி மாணவராக இவர் நடிக்க வினீத் ஸ்ரீநிவாசன் ஆசிரியராகவும் நடித்திருந்தார்.

இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் கலகலப்பான விசயம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் மேத்யூ தொடர்ந்து மலையாள சினிமாவில் அஞ்சாம் பாத்திரா, ஆப்ரேஷன் ஜாவா, ஒன், ஜோ அண்ட் ஜோ, பிரகாஷன் பரக்கட்டே, கிருஷ்டி, நெய்மர் என தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்த நிலையில் 2023-ம் ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாகவும், நடிகை த்ரிஷா நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களின் மகனாக நடிகர் மேத்யூ தாமஸ் லியோ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் படத்திலேயே நடிகர் விஜயின் மகனாக நடித்தது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. மேலும் படத்தில் மேத்யூ தாமஸை பார்த்த பலரும் சிறுவயதில் விஜய் இருந்தது போலவே இருக்கிறார் என்றும் தெரிவித்தனர். ஒருவேலை அதன் காரணமாக கூட இயக்குநர் இவரை விஜயின் மகனாக நடிக்க வைத்திருக்கலாம்.

இதனைத் தொடர்ந்து தமிழில் இவர் சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நடித்திருந்தார். இதில் நாயகனின் நண்பராக நடித்த மேத்யூ தாமஸின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் லவ்லி என்ற படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் மேத்யூ தாமஸின் இன்ஸ்டா பதிவு:

நடிகர் மேத்யூ தாமஸ் முன்னணி வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் ஈ-யை வைத்து ஃபேண்டசி கதை எடுத்துள்ளனர் என்பது ட்ரெய்லரைப் பார்க்கும் போதே தெரிந்தது. பலர் இந்தப் படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஈகா படத்துடன் ஒப்பிட்டும் பேசினர்.

இந்த நிலையில் நடிகர் மேத்யூ தாமஸ் இது நிச்சயமாக ஒரு வித்தியாசமான படம். பேசும் ஒரு ஈக்கும் என் கதாபாத்திரத்திற்கும் இடையில் ஏற்படும் ஒரு பிணைப்பை இந்தப் படம் காட்டுகிறது. மிகவும் ஜாலியாக ஃபீல் குட் படமாக இந்தப் படம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தொடந்து பேசிய அவர், இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஈகா பாத்திற்கும் இந்தப் படத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்தார்.