ஹீரோவாக கவின்.. வில்லியாக ஆண்ட்ரியா.. மாஸ்க் படம் எப்படி இருக்கு – எக்ஸ் விமர்சனம் இதோ

Mask Movie X Review: நடிகர் கவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று நடிகர் கவின் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி உள்ள மாஸ்க் படத்தின் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

ஹீரோவாக கவின்.. வில்லியாக ஆண்ட்ரியா.. மாஸ்க் படம் எப்படி இருக்கு - எக்ஸ் விமர்சனம் இதோ

மாஸ்க் படம்

Published: 

21 Nov 2025 12:26 PM

 IST

தமிழ் சினிமாவில் தற்போது இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் கவின். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கிஸ். இது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த ஆண்டிலேயே நடிகர் கவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் மாஸ்க். அதன்படி இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள இந்த மாஸ்க் படத்தில் நடிகை ஆண்ட்ரியா வில்லியாக நடித்துள்ளார். மேலும் நடிகை ருஹானி ஷர்மா நாயகியாக நடித்துள்ள இந்தப் படம் டார்க் காமெடி பாணியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் பாடல்களும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து இந்தப் படத்தப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை தொடர்ந்து தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். அதுகுறித்து தற்போது இங்கே பார்க்கலாம்…

மாஸ்க் படம் குறித்த எக்ஸ் விமர்சனம் இதோ:

படத்தின் முதல் பாதி சிறப்பாக உள்ளது. படத்தின் ரன்னிங்க் டைம் மற்றும் எடிட்டிங் மிக கட்சிதமாக உள்ளது. நடிகர் கவினின் காட்சிகள் மற்றும் வசங்கள் அருமையாக உள்ளது. இடைவேளைக் காட்சி வேறலெவலில் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மாஸ்க் படம் குறித்த எக்ஸ் விமர்சனம் இதோ:

மாஸ்க் படம் மிகவும் அருமையாக உள்ளது. படத்தில் பல காட்சிகள் கூஸ்பம்ஸ்களாக இருந்தது. நடிகர்கள் கவின் மற்றும் ஆண்ட்ரியா மிகவும் வலுவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மனதிற்கு நெறுக்கமானதாக உள்ளது.

மாஸ்க் படம் குறித்த எக்ஸ் விமர்சனம் இதோ:

மாஸ்க் படத்தின் முதல் பாதி டீசண்டாக உள்ளது. கதாப்பாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்த படக்குழு நேரம் செலவிட்டுள்ளது. கவின் மற்றும் ஆண்டிரியாவின் கதாப்பாத்திரங்கள் தனித்துவகாம உருவக்கப்பட்டுள்ளது. மேலும் இடைவேளை காட்சி மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

Also Read… பராசக்தி படத்திலிருந்து கியூட்டான BTS வீடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ரீலீலா

மாஸ்க் படம் குறித்த எக்ஸ் விமர்சனம் இதோ:

குடும்ப உணர்வுகள், ஆக்‌ஷன், காதல் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றை சரியான சமநிலையில் கொண்ட ஒரு இறுக்கமான த்ரில்லர் படம் மாஸ்க். கவின் மற்றும் ஆண்ட்ரியா சக்திவாய்ந்த நடிப்பை வழங்குகிறார்கள் – திரையில் இருப்பு
4–5 காட்சிகள் முற்றிலும் அதிர்ச்சியூட்டும் தருணங்கள்.

Also Read… வெயிட்டிங்கில் வெறியாகும் ரசிகர்கள்… ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட புது வீடியோ

மாஸ்க் படம் குறித்த எக்ஸ் விமர்சனம் இதோ:

மாஸ்க் படம் தீவிரமான கதைக்களம் மற்றும் சக்திவாய்ந்த நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் ஒரு கவர்ச்சிகரமான திரைப்படம். இயக்கம் கூர்மையானது, ஒரு சிறந்த திரைப்பட உருவாக்கம் மற்றும் நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒன்று.
தவறவிடாதீர்கள்.

வாரணாசி பட நிகழ்வில் நடந்த சுவாரசியங்கள்.... பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ!
ஊழியர்களை கண்காணிக்க புதிய கருவியை பயன்படுத்தும் Cognizant!
ஐபிஎல் ஏலம்.. எப்போது? எங்கு நடைபெறுகிறது? 
மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?