AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

kavin: கிஸ் பட டைட்டில் உரிமை.. கேட்டவுடன் கொடுத்த பிரபல இயக்குநர்!

Kiss Movie Title Story : தமிழில் நட்புன்னா என்னானு தெரியுமா என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் கவின் ராஜ். இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் இதுவரைக்கும் சில படங்கள் மட்டும் வெளியாகியிருந்தாலும், தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தைப் பிடித்துள்ளார். இவரின் நடிப்பில் ரிலீசிற்கு தயாராகிவரும் படம் கிஸ். இந்த படத்திற்கான தலைப்பை வைத்தவர் பற்றி கவின் கூறியுள்ளார்.

kavin: கிஸ் பட டைட்டில் உரிமை.. கேட்டவுடன் கொடுத்த பிரபல இயக்குநர்!
கவினின் கிஸ் திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 May 2025 18:58 PM IST

நடிகர் கவினின் (Kavin)  நடிப்பில் இறுதியாக வெளியான படம் பிளடி பெக்கர் (Bloody Beggar). இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) தயாரித்திருந்தார். இந்த படத்தில் கவின் பிச்சைக்காரன் நடித்திருந்தார். கடந்த 2024ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படம் போதுமான வரவேற்பைப் பெறாமல் பெரும் தோல்வியடைந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கதாநாயகனாக நடித்து வந்தார், அதில் ஒரு படம்தான் கிஸ் (Kiss). இந்த படத்தைப் பிரபல நடனக் கலைஞர் சதீஷ் கிருஷ்ணன் (Sathish Krishnan) இயக்கியுள்ளார். இவர் இந்த திரைப்படத்தின் மூலமாகத்தான் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது முற்றிலும் கல்லூரி சார்ந்த காதல் கதைக்களத்துடன் சிறப்பாக உருவாகியுள்ளது.

சமீபத்தில் இந்த படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் குரலில் வெளியான பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கவின், இந்த கிஸ் படத்தின் டைட்டிலை பற்றிக் கூறியுள்ளார். இந்த படத்தின் டைட்டிலையே இயக்குநரும், நடிகருமான மிஷ்கின்தான் கொடுத்தார் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

நடிகர் கவின் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் நடிகர் கவின் பேசும்போது “இந்த படத்திற்கான டைட்டிலையே நாங்கள் மிஷ்கின் சார் கிட்ட இருந்துதான் வாங்கினோம். அவர் ஏற்கனவே இந்த டைட்டிலை பதிவு செய்து வைத்திருந்தார். பின் நானும், இயக்குநர் சதீஷ் கிருஷ்ணனும் இணைந்து சென்று மிஷ்கின் சாரிடம் பேசி இந்த கிஸ் என்ற டைட்டிலை வாங்கினோம். ஆவர் முதலில் எதற்கு உங்களுக்கு இந்த டைட்டில் வேண்டும் என்று கேட்டார் உடனே இயக்குநர் அவரிடம் படத்தில், இந்த மாதிரியான மாறுபட்ட கதைக்களத்துடன்தான் வருகிறது அதனால் வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு இயக்குநர் மிஷ்கின் சார் ஓகே வைத்துக்கொள் என்று கூறினார்” என்று நடிகர் கவின் தெரிவித்திருந்தார்.

கிஸ் படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு :

நடிகர் கவினின் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக, சசிகுமாரின் அயோத்தி படத்தில் நடித்திருந்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர் விடிவி கணேஷும் இணைந்து நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் கல்லூரி, காதல் மற்றும் டான்ஸ் என மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்துக்காக இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இவர் இதற்கு முன் கவினின் டாடா மற்றும் பிளடி பெக்கர் போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us