Kuberaa : கத கத கதை.. தனுஷின் ‘குபேரா’ படத்திலிருந்து வெளியான அடுத்த பாடல்!

Kuberaa Movie Second Single : தெலுங்கு திரைப்பட இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில், மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் குபேரா. இந்த படத்தில் நடிகர் தனுஷ் முன்னணி நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்திலிருந்து கத கத கதை என்ற லிரிக்கள் பாடல் வெளியானது.

Kuberaa : கத கத கதை.. தனுஷின் குபேரா படத்திலிருந்து வெளியான அடுத்த பாடல்!

குபேரா பட பாடல்

Published: 

02 Jun 2025 22:08 PM

நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் தெலுங்கில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் குபேரா (Kuberaa). இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்துள்ளார் . இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா (Shekhar Kammula) இயக்கியுள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனமானது பெற்றுள்ளது. இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இதில் நடிகர் தனுஷ் இதுவரை நடித்திடாத, பிச்சைக்காரன் வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மற்றொரு வேடத்திலும் இவர் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் (Devi Sri Prasad) இசையமைத்துள்ளார்.

இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து, முதல் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து இப்படத்திலிருந்து “கத கத கதை” என்ற 2வது பாடல் வெளியாகியுள்ளது. தற்போது வெளியான இந்த பாடல் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

குபேரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

 

குபேரா படத்தின் கதைக்களம் இதுவா ?

நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த குபேரா படமானது அரசியல் மற்றும் பணம் சார்ந்த கதைகளுடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஒரு அரசியல்வாதியால் கடத்தப்படும் ஊழல் பணத்தை நடிகர் தனுஷ் எவ்வாறு இல்லாத மக்களுக்குக் கொண்டு சேர்கிறார் என்பது இப்படத்தின் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் 2 வேடத்தில் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் தனுஷிற்கு அடுத்ததாக நடிகர் நாகார்ஜுனாவும் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த குபேரா படத்தில் நடிகர் தனுஷ் தேவா என்ற பெயரில் நடித்துள்ளார்.

குபேரா படத்தின் மீது ரசிகர்களின் ஆர்வம் :

கடந்த 2025, ஜூன் 1ம் தேதியில் குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷ், தன் மீது எழும் அவதூறு குறித்தும், தனது திரைப்படத்தின் ரிலீசிற்க்கும் முன் பிரச்னைகளை எழுப்புவது குறித்தும் ஆவேசமாகப் பேசியிருந்தார். இது தொடர்ந்து ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் மீது நம்பிக்கை எழுந்துள்ளது. இதை தொடர்ந்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் குபேரா படத்திற்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில் எதிர்பார்ப்பில் மூழ்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் உலகமெங்கும் குபேரா படமானது வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது .