இணையத்தில் வைரலாகும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் புதுப் பட அப்டேட்!

Action King Arjun Sarja: தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் அர்ஜுன். தனது ஆக்‌ஷன் காட்சிகளால் ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ள நடிகர் அர்ஜுன் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இணையத்தில் வைரலாகும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் புதுப் பட அப்டேட்!

அர்ஜுனின் புதுப் பட அப்டேட்

Published: 

20 Aug 2025 22:18 PM

தென்னிந்திய சினிமா ரசிகர்களால் ஆக்‌ஷன் கிங் என்று அன்புடன் அழைக்கப்படுவபர் நடிகர் அர்ஜுன் சார்ஜா (Actor Arjun Sarja). கன்னட சினிமாவில் கடந்த 1981-ம் ஆண்டு அறிமுகம் ஆன இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல ஹிட் படங்களை கன்னட சினிமாவில் கொடுத்த இவர் கடந்த 1984-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நன்றி என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுனின் நடிப்பு தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். அதன்படி இவரது நடிப்பில் வெளியான படங்களில் இவரது சண்டைக் காட்சிகளைப் பார்க்கவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியளிலும் நடிகர் அர்ஜுன் சார்ஜா இடம் பிடித்தார்.

இந்த நிலையில் நடிகர் அர்ஜூன் சார்ஜா இறுதியாக தமிழில் நடித்து வெளியான படம் விடாமுயற்சி. நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்து இருந்தார் நடிகர் அர்ஜுன். இத்தனை வயது ஆகியும் இவரது ஆக்‌ஷன் காட்சிகள் விடாமுயற்சி படத்தில் பார்த்து ரசிகர்கள் பிரமித்து போனர். தொடர்ந்து சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி வில்லன், சிறப்பு கதாப்பாத்திரம், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல அவதாரங்களை நடிகர் அர்ஜுன் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் புது படத்தின் அப்டேட்:

இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் நாயகனாக நடிக்க உள்ள புதுப் படத்தின் படப்பிடிப்பு இன்று 20-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் உடன் இணைந்து நடிகர்கள் அபிராமி, பிரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மேலும் இயக்குநர் சுபாஷ் ராஜ் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். இவர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… அந்த வயசுக்கு இந்த உலகத்துல எதைப் பத்தியும் கவலை இல்லை… வைரலாகும் செல்வராகவனின் இன்ஸ்டாகிராம் பதிவு!

என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தனது 100-வது படம் குறித்து சுவாரஸ்யமாக பேசிய நாகர்ஜுனா – வைரலாகும் வீடியோ!