குற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடலாமா?.. விதிகள் கூறுவது என்ன?

What Happens if a Candidate Has a Criminal Case | தேர்தலில் போட்டியிட ஏராளமானவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வர். இந்த நிலையில், குற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடலாமா, அவ்வாறு போட்டியிட்டால் என்ன என்ன விதிகளை பின்பற்ற வேண்டும்.

குற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடலாமா?.. விதிகள் கூறுவது என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

29 Mar 2026 00:47 AM

 IST

தமிழ்நாடு மிக விரைவில் சட்டமன்ற தேர்தலை (Assembly Election) சந்திக்க உள்ளது. இதன் காரணமாக கட்சிகள் மிக தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு ஆகியவற்றை கடந்து தற்போது கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஒரு மாத காலமாக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல்களை நடத்தி வந்த கட்சிகள் தங்களின் அதிகாரப்பூர்வ பட்டியல்களை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் மீது குற்ற வழக்குகள் இருந்தால் என்ன நடக்கும், அவர் தேர்தலில் போட்டியிட அனுமதி உள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குற்ற வழக்கு உள்ளவர் தேர்தலில் போட்டியிடலாமா?

இந்திய குடிமக்கள் அனைவரும் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிட அனுமதி உள்ளது. ஆனால், அதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அந்த வகையில் குற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான சில விதிமுறைகளும் உள்ளன. வேட்பாளர் மீது குற்ற வழக்குகள் இருந்தால் அவருக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்படும். ஆனால், அதற்கு அந்த நபர் சில சட்டப்பூர்வ நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இதையும் படிங்க : விருத்தாசலத்தில் பிரேமலதா போட்டி.. வெளியான தேமுதிக வேட்பாளர் பட்டியல்

குற்ற வழக்குகள் குறித்து தகவல் தெரிவித்தல்

குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் தாங்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போதே தன் மீதுள்ள குற்ற வழக்குகள், முதல் தகவல் அறிக்கை மற்றும் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

மக்களிடம் பொது அறிவிப்பு செய்ய வேண்டும்

வேட்பாளர், வேட்புமனு தாக்கல் செய்த 48 மணி நேரத்திற்குள் அல்லது வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தன் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்து பொதுமக்களிடம் அறிவிக்க வேண்டும்.

இதையும் படிங்க : மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் களம் காணும் உதயநிதி ஸ்டாலின்.. நீட் தேர்வு ரத்து குறித்து ஓபனாக சொன்ன பதில்

தகுதி நீக்கம் எப்போது நடைபெறும்

வேட்பாளர் குற்ற வழக்குகளில் சிக்கி இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் தண்டனை பெற்றிருந்தார் என்றால் அவர் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்படுவார். விசாரணை நிலுவையில் இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்படாது.

Follow Us
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு
அதிகரிக்கும் போர் பதற்றம்.. 5 நாள் கெடு கொடுத்த அதிபர் டிரம்ப்..
"முன்பே வா" ரெய்னாவிற்கு மட்டுமல்ல.. தோனிக்கும் ரொம்ப பிடிக்கும்!.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த சுவாரசியம்!
ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் - துரந்தர் 2 படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்