எல்லா சினிமாக்காரனும் முட்டாள் அல்ல.. த.வெ.க மாநாட்டில் விஜய் சொன்ன குட்டி கதை..
TVK Conference Vijay Speech: தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய தலைவர் விஜய், எல்லா அரசியல்வாதியும் புத்திசாலி இல்லை என்றும், எல்லா சினிமாக்காரனும் முட்டள்கள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு தலைவர் உணமையாக இருக்கிறாரா என்பதை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தவெக மாநாட்டில் தலைவர் விஜய்
மதுரை, ஆகஸ்ட் 21, 2025: தமிழக வெற்றி கழகத்தில் இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய கட்சி தலைவர் விஜய் ஒரு அரசியல் தலைவர் சினிமாக்காரனா என்பதை பார்க்காமல் உண்மையானவனா என்பதை பார்க்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது அதில் குறிப்பாக தலைவர் விஜய் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி உள்ளார். குறிப்பாக, அதிமுக பாஜக கூட்டணி திமுக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இது போன்ற சூழலில் மேடையில் பேசிய தலைவர் விஜய் ஒரு குட்டி கதை கூறினார். அதில், “ அரசியல் தலைவர் என்பவர் நல்லவனா கெட்டவனா சினிமாக்காரனா என்பதையெல்லாம் தாண்டி உண்மையானவனா என்பதை பார்க்க வேண்டும். அதுதான் முக்கியம்.
குட்டி கதை சொன்ன விஜய்:
இது தொடர்பாக ஒரு குட்டி கதை சொல்கிறேன். ஒரு ஊரில் ஒரு ராஜா தனக்கு படைத்தளபதியாக தேர்ந்தெடுக்க ஆட்களை தேடினார். அப்போது அதில் 10 பேர் தேர்வானார்கள். ஆனால் அவர் ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் காரணமாக அந்த பத்து பேரிடம் அந்த ராஜா விதை நெல்லை கொடுத்து, மூன்று மாதம் கழித்து இந்த விதை நெல்லை நன்றாக வளர்த்து வாருங்கள் எனக் கூறியுள்ளார். அதில் ஒன்பது பேரும் விதை நெல்லை நன்றாக பயிரிட்டு வளர்த்த பின் ராஜாவிடம் கொண்டு வந்து காட்டினார்கள். அதில் ஒருவர் மட்டுமே விதை நெல் எங்கே என்று கேட்ட பொழுது அந்த விதை நெல் எவ்வளவு தண்ணீர் ஊற்றியும் எது செய்தாலும் வளரவில்லை என கூறியுள்ளார்.
மேலும் படிக்க: 234 தொகுதிகளிலும் விஜய்தான் போட்டி – த.வெ.க மாநாட்டில் தலைவர் விஜய் வைத்த டிவிஸ்ட்..
உடனே ராஜா அவரை கட்டி அணைத்து நீதான் என்னுடைய தளபதி. இனி உனக்கு தான் எல்லா அதிகாரமும் என கூறியுள்ளார். ஏனென்றால் அந்த பத்து பேரிடம் ராஜா கொடுத்தது அவித்த விதைகள். அது பயிரிட முடியாத். அந்த ஒன்பது பேரும் வேறு விதை நெல்லை வாங்கி பயிரிட்டு உள்ளனர். எனவே ஒரு நாட்டிற்கு திறமை எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு உண்மையும் முக்கியம். இப்போது நீங்கள் எல்லாரும் தான் இந்த ராஜா. நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகிற அந்த தளபதி யார்?
மேலும் படிக்க: ரிதன்யா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கணவர் உட்பட 3 பேருக்கு ஜாமீன்.. அதிர்ச்சியில் ரிதன்யா குடும்பத்தார்!
எல்லா சினிமாகாரனும் முட்டாள் கிடையாது:
அம்பேத்கர் அவர்களை தோற்கடித்த சினிமாக்காரன் அல்ல ஒரு அரசியல்வாதி காமராஜரை தோற்கடித்தது சினிமாக்காரன் அல்ல அரசியல்வாதி இன்றளவும் நம்முடன் வாழ்ந்து வரும் ஐயா நல்லகண்ணுவை தோற்கடித்தது சினிமாக்காரன் அல்ல அரசியல்வாதி. எனவே எல்லா அரசியல்வாதியும் அறிவாளியும் கிடையாது எல்லா சினிமாக்காரனும் முட்டாளும் கிடையாது” என பேசியுள்ளார்.