“அநீதி இழைத்தால் புரட்சி வெடிக்கும்!”.. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

தற்போது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மாற்றியமைப்பது, இந்த நற்செயலுக்குத் தண்டனை வழங்குவது போல உள்ளது என்று அவர் வேதனை தெரிவித்தார். தொகுதியை குறைப்பதை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. புரட்சி ஏற்படும். தமிழ்நாடு மக்கள் எல்லோரும் போராடுவார்கள். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒருபோதும் பறிகொடுக்க மாட்டோம்.

அநீதி இழைத்தால் புரட்சி வெடிக்கும்!.. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

செல்வப்பெருந்தகை

Updated On: 

17 Apr 2026 11:34 AM

 IST

Tamilnadu Polls 2026: மத்திய அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கையில் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்பட்டால், அது மிகப்பெரிய மக்கள் புரட்சிக்கு வழிவகுக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார். இந்த தொகுதி மறுவரையறையை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதன்மூலம் தென்தமிழ்நாட்டில் யாரும் பிரதமர் ஆக முடியாது. வடமாநிலங்களில் இந்துத்துவா அதிகமுள்ள இடங்களில் அதிக தொகுதிகளை உருவாக்கிக்கொள்வார்கள். அதே நேரத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆகிய மாநிலங்கள் எண்ணிக்கை குறைக்கப்படும். இதனால் பாதிக்கப்படுவது தென்மாநிலங்கள் தான். மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது. தொகுதியை குறைப்பதை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது.

இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் ‘தொகுதி மறுவரையறை’ மசோதா தாக்கல்.. தமிழக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு!!

குடும்பக் கட்டுப்பாட்டிற்கு கிடைத்த தண்டனையா?

1960 மற்றும் 70-களில் ஒன்றிய அரசு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது, அதனை ஏற்று தமிழ்நாடு மிகச் சிறப்பாகச் செயல்படுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார். “தேசம் நல்லா இருக்கணும், இந்தியா முழுவதும் நல்லா இருக்கணும் என்பதற்காகத் தமிழ்நாட்டில் மக்கள் தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினோம். ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ மற்றும் ‘ஒன்று போதும்’ என்ற இலக்குகளைத் தமிழ்நாடு முறையாகப் பின்பற்றியது” என்று அவர் குறிப்பிட்டார்.

ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது:

தற்போது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மாற்றியமைப்பது, இந்த நற்செயலுக்குத் தண்டனை வழங்குவது போல உள்ளது என்று அவர் வேதனை தெரிவித்தார். தொகுதியை குறைப்பதை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. புரட்சி ஏற்படும். தமிழ்நாடு மக்கள் எல்லோரும் போராடுவார்கள். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒருபோதும் பறிகொடுக்க மாட்டோம். எனவே இந்த புதிய சட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.

போராட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு:

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். இதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டம் விஸ்வரூபம் எடுக்கும் என்றும், தமிழ்நாட்டின் நலனையும் எதிர்காலத்தையும் பறிக்க முயன்றால் மாநிலத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதையும் படிக்க: மு.க.ஸ்டாலின் ஐயா ஒரு கீ கொடுக்கும் பொம்மை.. அண்ணாமலையின் அனல் பறக்கும் பேச்சு!

இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து போராடுவார்கள் என்றும், மாநிலத்தின் உரிமைகளை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

Follow Us
Related Stories
ராகுல் காந்தி – மு.க.ஸ்டாலின் இணைந்து பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பில்லை.. ஆர்.எஸ்.பாரதி வைத்த அதிரடி ட்விஸ்ட்!
கேஸ் தட்டுபாடால் ஆட்டோ ஓட்டுநர்கள் அவதி.. பெரம்பூர் வேட்பாளர் திலகபாமா கொடுத்த வாக்குறுதி..
கரூரில் பரபரப்பு.. செந்தில் பாலாஜி நண்பர் வீடு – அலுவலகத்தில் திடீர் சோதனை.. அதிரடியாக களமிறங்கிய வருமான வரித்துறை!
Neyveli Constituency Election 2026: தொழிற்சாலை நகரமாக இருக்கும் நெய்வேலி.. மக்களின் ஆதரவு யாருக்கு?
வாக்காளர்களுக்கு ரூ.10,000 போலி செக்.. வீடு வீடாக விநியோகம்.. நிலக்கோட்டையில் பரபரப்பு!
திமுகவின் ஒற்றை நோக்கம் இது தான்.. உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடி தாக்கு!
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி