த.வெ.க மாநாடு.. அடுத்தடுத்த சோகம்.. 100 அடி கொடி கம்பம் விழுந்து நொறுங்கிய கார்.. ..

TVK Madurai Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21, 2025 அன்று மதுரை பாரபத்தியில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது 100 அடி கொடிக் கம்பம் விழுந்து விபத்துகுள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

த.வெ.க மாநாடு.. அடுத்தடுத்த சோகம்.. 100 அடி கொடி கம்பம் விழுந்து நொறுங்கிய கார்.. ..

கொடிக் கம்பம் விழுந்து விபத்து

Updated On: 

20 Aug 2025 16:36 PM

மதுரை, ஆகஸ்ட் 20, 2025: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நாளை, அதாவது 21 ஆகஸ்ட் 2025 அன்று மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்காக 100 அடி உயர கொடிக்கம்பம் நட முயன்றனர். அப்போது 30 டன் எடை தாங்கும் ராட்சச கிரேன் மூலம் அந்த கொடிக்கம்பத்தை நட முயற்சி செய்தபோது, அது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக, தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டை வரவேற்கும் வகையில் பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

மேலும் படிக்க: குறையும் மழை.. அதிகரிக்கும் வெப்பநிலை.. அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

த.வெ.க சந்திக்கும் முதல் தேர்தல்:

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இதில் தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்காக மாவட்டச் செயலாளர் கூட்டம், ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், உறுப்பினர் சேர்க்கை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டில் குறைந்தபட்சம் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: தவெக மாநாடு.. பேனர் வைக்க முயன்ற மாணவர்.. மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல்:

506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல், பார்க்கிங் இடங்கள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் தலைவர் விஜய் வருகை தந்தபோது, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கொடிக்கம்பத்தில் அவர் கட்சிக்கொடியை ஏற்றினார். அதேபோல், இரண்டாவது மாநாட்டிலும் திடலின் முகப்பில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

100 அடி கொடிக் கம்பம் விழுந்து விபத்து:

இதற்காக இந்த கொடிக்கம்பத்தை நட, 30 டன் எடையைத் தாங்கும் அளவு ராட்சச கிரேனின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் கொடிக்கம்பம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கொடிக்கம்பம் கீழே விழுந்ததில் கட்சி நிர்வாகியின் கார் மீது விழுந்து, கார் சிதைந்து நொறுங்கியது. ஆனால், இந்த நிகழ்வின் போது நல்வாய்ப்பாக எந்த உயிர் சேதமும் அல்லது காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.