த.வெ.க கொடியை தலையில் கட்டி ரேம்ப் வாக்கில் விஜய்.. ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் கூட்டம்..

TVK Conference Madurai: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தலைவர் விஜய் கட்சிக் கொடியை தலையில் கட்டியும், தோளில் அணிந்தும் விழா மேடையில் இருந்து ரேம்ப் வாக் மூலம் மக்களை சந்தித்து வருகிறார்,

த.வெ.க கொடியை தலையில் கட்டி ரேம்ப் வாக்கில் விஜய்.. ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் கூட்டம்..

த.வெ.க மாநாடு

Updated On: 

21 Aug 2025 16:14 PM

மதுரை, ஆகஸ்ட் 21, 2025: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் தொடங்கி நடைபெற்ற வருகிறது. இந்த இரண்டாவது மாநாட்டில் கட்சியின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் விஜய் என்ற பாடல் வெளியாகி உள்ளது. விழா மேடைக்கு வந்த கட்சித் தலைவர் விஜய் ரேம்ப் வாக்கில் மக்கள் மத்தியில் நடந்த வருகிறார். லட்சக்கணக்கான மக்கள்இந்த மாநாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மக்களிடையே விஜய் நடந்தது செல்லும் நிலையில் அவர் மீது த.வெ.க கட்சியின் துண்டுகள் வீசப்படுகிறது. அதனை தலைவர் விஜய் தலையில் கட்டியும் தோளில் அணிந்தும் நடந்து சென்று மக்களை சந்திக்கிறார்.

தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டு அதன் முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. அதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மதுரை பாரபத்தியில் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். பாரம்பரிய இசை நிகழ்ச்சியாலும், தலைவர் விஜய் நடித்த படங்களின் பாடல்களாலும், நாதஸ்வர இசையாலும் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

ரேம்ப் வாக்கில் தலைவர் விஜய்:


அதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மேடைக்கு வருகை தந்தார். தலைவர் விஜய் மேடைக்கு வந்தபோது, அங்கிருந்த லட்சக்கணக்கான மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், தலைவர் விஜய் மேடையிலிருந்து அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். அதன் பின்னர், 300 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வழியாக நடந்து சென்று மக்களை சந்தித்தார்.

மேலும் படிக்க: 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகும் வெப்பநிலை.. அடுத்த 7 நாட்களுக்கு எப்படி இருக்கும்?

ரேம்பில் விஜய் நடந்து செல்லும் போது, சில தொண்டர்கள் தடுப்பை மீறி அவரை நோக்கி ஓடி வந்தனர். மேலும், தலைவர் விஜய் நடந்து செல்லும்போது, அவர்மீது கட்சி கொடிகள் மற்றும் துண்டுகள் வீசப்பட்டன. அவற்றை அவர் தனது தோளிலும் தலையிலும் கட்டிக்கொண்டு நடந்து சென்றார். அவரை நோக்கி வந்த தொண்டர்களை, விஜயுடன் இருந்த பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.

மேலும் படிக்க: 2026 பொங்களுக்கு ரூ.5,000 பரிசுத்தொகை வழங்கும் அரசு?.. தீயாக பரவும் தகவல்!

அதே சமயத்தில், தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாட்டில், ரேம்பில் செல்லும்போது தொண்டர்களுடன் செல்பி மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டார் விஜய். “உங்கள் விஜய்” என்ற பாடல் ஒலிக்க, ரேம்ப் வழியாக அவர் நடந்து சென்றார். தலைவர் விஜய் வந்தவுடன் அங்கிருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். ரேம்ப் சென்ற பின்னர், தலைவர் விஜய் மீண்டும் மேடைக்கு திரும்பி, அங்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.