Tamil Nadu Election 2026 Live: இன்று பரப்புரை கடைசி நாள்.. வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டும் அரசியல் கட்சிகள்!
Tamil Nadu Election 2026 Live: தமிழகத்தைப் பொறுத்தவரையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu Assembly Election 2026
LIVE NEWS & UPDATES
-
விசில் சின்னம் மட்டுமே – விஜய் அறிக்கை
எப்போதும்போல அடைமழையாக இந்த அரசியல் சூதாடிகளின் ஊழல் – லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று, நீங்கள் அனைவரும் திருவிழாக் கோலம் பூண்டு, விசில் புரட்சிக்குத் தயாராகி, குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்க வேண்டிய, எவ்வித மறுசிந்தனைக்கும் இடம் தராத ஒற்றைத் தேர்வாக “விசில் சின்னம்” மட்டுமே – விஜய்
-
பணத்தை மட்டுமே நம்பி
பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தாலும், பிளவுவாத சக்திகளுக்கான மறைமுக அல்லது நேரடி ஆதரவாக மட்டுமே அது மாறும் – விஜய்
-
மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை – விஜய்
எந்த அரசியல் கட்சி முன்புலமோ பின்புலமோ இன்றி அரசியலுக்கு வந்த என்னை ‘நீ வாப்பா’… ‘நீ வா தம்பி’… ‘நீ வாண்ணா’… ‘நீ வா நண்பா’… ‘நீ வா தோழா’… ‘நாங்க பாத்துக்கறோம்’… என்ற உங்களின் பேரன்பும் பேராதரவும் மட்டுமே என்னை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை – விஜய்
-
யர்தனி உள்ளன்பு மட்டும்தான். – விஜய் அறிக்கை
மக்களே…மீண்டும் சொல்கிறேன். இத்தனை நெருக்கடிகளையும் இத்தனை நிர்பந்தங்களையும் இத்தனை வேதனைகளையும் உங்கள் விஜய் தாங்கிக்கொண்டு நிற்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது உங்களின் உயர்தனி உள்ளன்பு மட்டும்தான். – விஜய் அறிக்கை
-
வெளியாட்கள் வெளியேற உத்தரவு
தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா? என்பதை கண்டறியப்படும் – தேர்தல் ஆணையம்
-
தேர்தல் பொழுதுபோக்கு நிகழ்ச்சி கூடாது
பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், இசை நிகழ்ச்சி, திரையரங்கச் செயல்பாடு, பிற கேளிக்கை உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த கூடாது. அதன் மூலம் பொதுமக்களிடம் தேர்தல் விவகாரத்தையும், பரப்புரை செய்யக் கூடாது – தேர்தல் ஆணையம்
-
பிரசாரம் முடிகிறது – தேர்தல் ஆணையம் விதிமுறைகள்
இன்று மாலை 6 மணிக்கு மேல், தேர்தல் தொடர்பாக எந்த வித பொதுக்கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட எந்த சாதனம் மூலம் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது
-
இன்று மாலைக்குள் வெளியேற வேண்டும்
வெளியூர் அரசியல் பிரமுகர்கள் இன்று மாலைக்குள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு
-
கல்விக்காக பல திட்டங்கள்
கல்விக்காக அவர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் மு க ஸ்டாலின் – அரவிந்த் கெஜ்ரிவால்
-
மு.க.ஸ்டாலின் காட்டிய எதிர்ப்பை இந்தியாவே கண்டது – அரவிந்த் கெஜ்ரிவால்
பாஜகவின் பிடியில் அதிமுக இருக்கிறது. பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலை தான் அதிமுகவுக்கு ஏற்படும். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் காட்டிய எதிர்ப்பை இந்தியாவே கண்டது – அரவிந்த் கெஜ்ரிவால்
-
தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசம் – வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசம் – வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்
வீடியோ
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…#வெல்வோம்_ஒன்றாக ! pic.twitter.com/wu9Kek7jAD
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 21, 2026
-
ஈகோவும் இல்லாதவர் ஸ்டாலின்- அரவிந்த் கெஜ்ரிவால்
முதல்வர் மு.க.ஸ்டாலின் போல ஒரு தலைவர் கிடைக்க மாட்டார். அவர் தமிழ்நாட்டுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் பாடுபடுகிறார். அவர் எந்த வித ஈகோவும் இல்லாதவர் – அரவிந்த் கெஜ்ரிவால்
-
அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
மு.க.ஸ்டாலின் ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் பாடுபடுகிறார் என அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
-
சமூக வலைதளங்களிலும் கட்டுப்பாடு
இன்று கடைசி நாள் பரப்புரை என்பதால் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் கட்சி சார்ந்த பதிவுகளை பதிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது
-
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் மேற்கு வங்காள இறுதிகட்ட தேர்தல் முடிந்த பின்னர் வருகிற 29-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல்தான் வெளியிட வேண்டும்
-
தேர்தல் கருத்துக்கணிப்பு
தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிடவும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. மாலை 6 மணிக்கு மேல் எந்தவித தேர்தல் கருத்துக்கணிப்பும் வெளியிடக்கூடாது
-
பிரசாரத்தை நிறைவு செய்யும் தலைவர்கள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அதேபோல், பழனிசாமி, சீமான் ஆகியோர் அவரவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்கள்
-
மாலை 6 மணியுடன் ஓய்கிறது. பிரசாரம்
சுமார் 20 நாட்களாக நடந்து வரும் தேர்தல் பரப்புரை, இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 21 இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ஏப்ரல் 21, 2026 நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுக் கூடங்களையும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தென் சென்னை பகுதிகளில் தவெக தலைவர் விஜய் ஏப்ரல் 21, 2026 அன்று விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். மேலும், சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விஜய் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், நந்தனம் YMCA மைதானத்தில் நாளை பிற்பகல் தவெக மாநில செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.