K.A.Sengottaiyan Tamil Nadu Election: தவெகவில் ஐக்கியமான செங்கோட்டையன்.. கோபி தொகுதியை தக்க வைப்பாரா?! | TV9 Tamil News

K.A.Sengottaiyan Tamil Nadu Election: தவெகவில் ஐக்கியமான செங்கோட்டையன்.. கோபி தொகுதியை தக்க வைப்பாரா?!

Updated On: 

09 Mar 2026 13:43 PM

 IST

Tamil Nadu Elections 2026 : அதிமுகவில் 50 ஆண்டுகளுக்கு மேலான தனது அரசியல் வாழ்வில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக அந்தக் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து கட்சி பணியாற்றி வருகிறார் கே. ஏ. செங்கோட்டையன்.

1 / 5அதிமுகவில்  முன்னாள் அமைச்சராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன் தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய தலைமை  நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். இவர்,  கடந்த 1948 ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி  கே.எஸ். அர்த்தநாரி கவுண்டருக்கு  மகனாக பிறந்தார். தனது 25- ஆவது வயதில்  எம்ஜிஆர் மீது  கொண்ட  ஈர்ப்பு காரணமாக  அதிமுகவில்  இணைந்தார்.  அதன்படி,  1972- ஆம் ஆண்டு  தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்  கே. ஏ. செங்கோட்டையன். அதிமுகவில் இவருக்கு முதல் முதலாக  எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பதவி கிடைத்தது.

அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன் தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். இவர், கடந்த 1948 ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி கே.எஸ். அர்த்தநாரி கவுண்டருக்கு மகனாக பிறந்தார். தனது 25- ஆவது வயதில் எம்ஜிஆர் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக அதிமுகவில் இணைந்தார். அதன்படி, 1972- ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் கே. ஏ. செங்கோட்டையன். அதிமுகவில் இவருக்கு முதல் முதலாக எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பதவி கிடைத்தது.

2 / 5

பின்னர், 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் கே. ஏ. செங்கோட்டையன் களம் இறங்கியதுடன், காங்கிரஸ் கோட்டையாக திகழ்ந்து வந்த அந்த தொகுதியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். பின்னர், 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் மாற்றி களமிறங்கிய கே. ஏ. செங்கோட்டையன் அங்கும் வெற்றி பெற்று தற்போது வரை தனது வெற்றியை பதிவு செய்து வருகிறார். இதன் காரணமாக கோபி தொகுதியானது அவரது வசமே இருந்து வருகிறது.

3 / 5

இதன் மூலம் தமிழக தேர்தல் வரலாற்றில் இரு தொகுதிகளில் தொடர்ச்சியாக 10 முறை போட்டியிட்டு 9 முறை வெற்றி பெற்ற சாதனையாளர் என்ற பெயரையும் கே. ஏ. செங்கோட்டையன் தனதாக்கி கொண்டார். இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு தீவிர விசுவாசியாக இருந்ததன் காரணமாக போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சர் பொறுப்பு மற்றும் கட்சியின் தலைமை நிலைய செயலர் பொறுப்பு உள்ளிட்டவை செங்கோட்டையனை வந்து சேர்ந்தது. இதிலும் குறிப்பாக அதிமுகவில் கூட்டணி பேச்சு வார்த்தை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட கட்சி நகர்வுகள் அனைத்தும் செங்கோட்டையன் இல்லாமல் நிகழ்ந்தது கிடையாது.

4 / 5

ஜெயலலிதாவுக்கு பிறகு நான் முதல்வராகியிருக்க வேண்டும்

5 / 5

தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சி பணியாற்றி வருகிறார். இதனால், வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் அவர் தவெக சார்பில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. தொடர்ச்சியாக 20 ஆண்டு காலம் தனது கட்டுப்பாட்டில் இருந்து வரும் கோபிசெட்டிபாளையம் மீண்டும் செங்கோட்டையன் வசம் செல்லுமா அல்லது அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளின் வசம் செல்லுமா என்பதை தேர்தல் முடிவுகளும், அந்த தொகுதியின் மக்களும் தான் முடிவு செய்வார்கள்.

Follow Us
Related Stories
சீரடி சாய் பாபா கோவிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம்..
Puducherry Election Exit Poll Result: புதுச்சேரியில் மீண்டும் மலர்கிறது தேஜ கூட்டணி ஆட்சி.. முதல்வராகும் என்.ரங்கசாமி.. கருத்துக்கணிப்பில் தகவல்!
TVK Exit Poll Result: ஆட்சி அதிகார கனவில் தவெக.. 40 தொகுதிகளே கை கொடுக்க வாய்ப்பு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கருத்துக் கணிப்பு!
NTK Exit Poll Results: 4 முதல் 5 சதவீத வாக்குகள் மட்டுமே நாம் தமிழருக்கு கிடைக்கும்? எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும்?
ADMK Exit Poll Result: வெளியான தேர்தல் கருத்துக்கணிப்பு.. ஆட்சியை கைப்பற்றுமா அதிமுக? எத்தனை சதவீத வாக்குகள் பெரும்?
DMK Exit Poll Results: 169 தொகுதிகளை எட்டி பிடிக்கும் திமுக.. 55% வாக்குகளை அசராமல் அடிக்கும்.. கருத்து கணிப்பில் தகவல்!