‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ நாளை முதல் மாபெரும் பெரும் பயணம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Edappadi Palaniswami's Bus Campaign: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2025 ஜூலை 7 முதல் 23 வரை 33 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பஸ் பயண பிரச்சாரம் மேற்கொள்கிறார். 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன், திமுக ஆட்சியை அகற்றுவதே இதன் நோக்கம்.

தமிழ்நாடு ஜூலை 06: கோவை மாவட்டம் (kovai) மேட்டுப்பாளையத்தில் இருந்து 2025 ஜூலை 7-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் (General Secretary Edappadi Palaniswami) தேர்தல் சுற்றுப் பயணம் (Election tour) தொடங்குகிறது. 33 சட்டமன்றத் தொகுதிகளை சுற்றும் இந்த பயணத்தில், பஸ்சில் பயணித்து மக்களை நேரில் சந்தித்து அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஒவ்வொரு தொகுதியிலும் ரோடு ஷோக்கள், கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் உணவு மற்றும் தங்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகம் எடப்பாடி பழனிசாமிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கியுள்ளது. இதனை முன்னிட்டு பிரசாரப் பயணத்திற்கான அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் பாடல் ராயப்பேட்டையில் வெளியிடப்பட்டது. “திமுக ஆட்சியை அகற்றுவதே இந்த பயணத்தின் நோக்கம்” என எடப்பாடி பழனிசாமி உறுதியாகத் தெரிவித்தார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் முழக்கத்துடன் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் தொடங்கப்பட உள்ளது. ஜூலை 7ஆம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கும் இந்த பயணம், 2025 ஜூலை 23ஆம் தேதி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நிறைவு பெறுகிறது. இந்த பயணத்தில் 33 சட்டமன்ற தொகுதிகள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.




மக்களோடு இபிஎஸ் நேரில் உரையாடல்
பொதுவாக வேன் அல்லது காரில் பயணிக்கும் கட்சி தலைவர்களுடன் வேறுபட்ட விதமாக, எடப்பாடி பழனிசாமி பஸ்சில் பயணிக்கிறார். இந்த பயண பஸ்ஸில் அவர் சட்டமன்ற தொகுதிகளைச் சுற்றி மக்களோடு நேரில் உரையாடுகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் ரோடு ஷோக்கள் நடத்தப்படும். சில இடங்களில் அவர் கட்சி நிர்வாகிகளின் வீட்டில் உணவருந்தவும், இரவு தங்கவும் திட்டமிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் சுற்றுப் பயணம்
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள்,#மக்களைக்_காப்போம்#தமிழகத்தை_மீட்போம்
என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
முதற்கட்ட தொடர் பிரசார சூறாவளிச் சுற்றுப்பயணம்… pic.twitter.com/AqYV6qAyhr
— SP Velumani – SayYEStoWomenSafety & AIADMK (@SPVelumanicbe) July 5, 2025
எடப்பாடி பழனிசாமிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு அளித்துள்ளது. இது பிரதமருக்குப் பிறகு வழங்கப்படும் உயர்தர பாதுகாப்பாகும். 12 கமாண்டோக்கள், 52 காவலர்களுடன் பாதுகாப்பு வழங்கப்படும். அவரது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த பின்னர் இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அவருக்கு ‘Y+’ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
சுற்றுப் பயணத்திற்கான அதிகாரப்பூர்வ பாடல் வெளியீடு
சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் அதிகாரப்பூர்வ பாடல், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 2025 ஜூலை 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “நான் எப்போதும் மக்களுடன்தான் இருப்பவன்; இந்த பயணமும் அதற்கான ஒரு தொடர்ச்சி. திமுக ஆட்சியை மாற்றி மக்களுக்கு நலவழி அமைப்பதே என் நோக்கம்” என்று கூறினார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவும், மேலும் பல கட்சிகளும் இணைவதாகவும், இது ஒரு மெகா கூட்டணியாக உருவெடுக்கப்போகிறது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 2026 தேர்தலில் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும், தாங்களே முதலமைச்சர் வேட்பாளர் என்றும் உறுதிபட கூறினார். இந்த அணியின் குறிக்கோள் – மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே எனவும் வலியுறுத்தினார்.